Pages

Search This Blog

Showing posts with label Rajathi Raja. Show all posts
Showing posts with label Rajathi Raja. Show all posts

Friday, January 24, 2014

ராஜாதி ராஜா - மாமா உன் பொண்ண குடு

மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
அட மாமா உன் பொண்ண குடு
ஆமா சொல்லி புடு
இது சாமி போட்ட முடிச்சு
அது தாண்ட மூணு முடிச்சு ,,
இது சாமி போட்ட முடிச்சு
அது தாண்ட மூணு முடிச்சு
தாலி கட்டவும் மேளம் கொட்டவும் நேரம் வந்துருச்சு
ஊரு உலகம் சேர்ந்து எனக்கு மாலை தந்துருசு ..


ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டுக்குங்க நல்ல புள்ள
உத்தமான வாழ்ந்து வந்தேன்
தப்பு தண்ட ஏதும் இல்ல
அட மாப்பிளை நான் யோகியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
மாப்பிள்ளை நான் யோகியன் தான்
நீங்க செஞ்ச பாக்கியம் தான்
யாருக்கும் தெரியாம நான் தாலி கேட்டவும் மாட்டேன்
நியாயாத மறக்காம அட நானும் உங்ககிட்ட கேட்டேன்
என்னோட ஆசை உன் பொண்ணோட பேச என் மாமா நீ சொன்ன கேளு

மாமா உன் பொண்ண குடு ....


கண்ணபுரம் போனதில்ல பான்ஜாலிய பாத்ததில்லை
ஆமா காஞ்சிபுரம் போனதில்லை காமத்சிய கண்டதில்லை
அட பட்டனம்தான் போனதில்லை பத்தினியா பாத்ததில்லை
பட்டணம் தான் போனதில்லை பத்தினியா பாத்ததில்லை
ஆயிரம் இருந்தாலும் உன் மகள போல வருமா
மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா
உன்னோட நானும் அட ஒன்னாக வேணும்
என் மாமாவே என்ன வேணும்

மாமா உன் பொண்ண ...

Rajadhi Raja - Mama Un Ponnakodu

ராஜாதி ராஜா - மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா 

சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே
முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி
தத்தித் தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி
மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே
காயம் பட்ட காளை நெஞ்சம் காமன் கணை மூடுதே
மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ
இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே
சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா 

இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளித் தூவுங்கள்
மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தைப் போடுங்கள்
சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளைத் தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்
பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லித் தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள்
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா

Rajadhi Raja - Meenamma Meenamma

ராஜாதி ராஜா - மலையாள கரையோரம் தமிழ் பாடும்

சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடுக்குது
வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்
மனம் விட்டு சிரிக்கின்றதே

மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலமுடியினில் பனி வடியுது வடியுது
மண் மடங்குதம்மா
தலையனயினில் மனம் கரையுது கரையுது
கண் மயங்குதம்மா

நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள
நீரோடை தாயை போல வாரி வாரி அல்ல
நீல வானம் அதில் அதனை மேகம்
நீர்கொண்டு காற்றிலேறி நீண்ட தூரம் போகும்
காதோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச
காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச
பேச்சும் பார்த்தும் ????? கூடாதோ
தோளை தொட்டு ஆடாதோ
பார்க்க பார்க்க ஆனந்தம்
போகப்போக வாராதோ
என் மனம் துள்ளுது தன் வழி செல்லுது
வண்ண வண்ண பூவே

தூறல் உண்டு மலை சாரலும் உண்டு
பொன்மாலை வெயில் கூட ஈரமவதுண்டு
தோட்டமுண்டு கிள்ளி கூட்டமும் உண்டு
கிள்ளிக்கும் நமை போல காதல் வாழ்க்கை உண்டு
நான் அந்த கிள்ளி போல வாழ வேண்டும்
வானத்தை வட்டமிட்டு பாட வேண்டும்
எண்ணம் என்னும் சிட்டு தான் ரெக்கை கட்டி கொள்ளாத
எட்டு திக்கும் தொட்டு தன் எட்டி பாய்ந்து செல்லாத

Rajathi Raja - Malayala Karayoram

ராஜாதி ராஜா - வா வா மஞ்சள் மலரே

வா  வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே
வா  வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே 
வைர  மணி  தேரினிலே  ஒன்ன  வெச்சு  நான்  இழுப்பேன்
வைர  மணி  தேரினிலே  ஒன்ன  வெச்சு  நான்  இழுப்பேன்
என்னுயிரே ..ஹா  ஹா  ஹா  ஹா
வா  வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே

குயில்  வந்து  கூவையிலே
குஷியான  பாடலிலே
ஒயிலாள்  மனம்  தவிக்குதைய
உயிரே  தினம்  உருகுதையா
வாச  கருவேப்பில்லையே
உந்தன்  நேசம்  வந்து  சேர்ந்ததம்மா
வீசும்  இளன் தென்றலிலே 
உந்தன்  தூதும்  வந்து  சேர்ந்ததம்மா
பொன்னான  நேரம்  வீணாகுது
என்னோடு  சேர்ந்தே  ஒன்றாயிரு
என்ன  சொல்லுறே  ஆ  ஆ  ஆ  ஆ

வா  வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே
வைரமணி  தேரினிலே
ஒன்ன  வச்சி  நான்  இழுப்பேன்
என்னுயிரே  ஹா  ஹா  ஹா ஹா
வா  வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே

தென்னை  மரம்  பிளந்து
தெருவெல்லாம்  பந்தலிட்டு
பந்தல்  அலங்கரித்து
பாவை  உன்னை  அமர  வைத்து
அம்மி  அதை  மிதித்து
அரசாணி  பூட்டி  வைத்து
அருந்ததியை  சாட்சி  வைத்து
அழகு  மஞ்சள்  கயிர்   எடுத்து
கல்யாணம்  ஆகும்  காலம்  வரும்
எல்லோரும்  காணும்  நேரம்  வரும்
என்ன  சொல்லுறே  ஹா  ஹா  ஹா  ஹா

வா  வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே
வைர  மணி  தேரினிலே
உன்ன  வச்சு  நான்  இழுப்பேன்
என்னுயிரே  ஹா  ஹா  ஹா ஹா

வா  வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே
வா  வா  மஞ்சள்  மலரே
ஒண்ணு  தா  தா  கொஞ்சும்  கிளியே

Rajadhi Raja - Vaa Vaa Manjalmalare

Followers