சிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடுக்குது
வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள்
மனம் விட்டு சிரிக்கின்றதே
மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலமுடியினில் பனி வடியுது வடியுது
மண் மடங்குதம்மா
தலையனயினில் மனம் கரையுது கரையுது
கண் மயங்குதம்மா
நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள
நீரோடை தாயை போல வாரி வாரி அல்ல
நீல வானம் அதில் அதனை மேகம்
நீர்கொண்டு காற்றிலேறி நீண்ட தூரம் போகும்
காதோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச
காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச
பேச்சும் பார்த்தும் ????? கூடாதோ
தோளை தொட்டு ஆடாதோ
பார்க்க பார்க்க ஆனந்தம்
போகப்போக வாராதோ
என் மனம் துள்ளுது தன் வழி செல்லுது
வண்ண வண்ண பூவே
தூறல் உண்டு மலை சாரலும் உண்டு
பொன்மாலை வெயில் கூட ஈரமவதுண்டு
தோட்டமுண்டு கிள்ளி கூட்டமும் உண்டு
கிள்ளிக்கும் நமை போல காதல் வாழ்க்கை உண்டு
நான் அந்த கிள்ளி போல வாழ வேண்டும்
வானத்தை வட்டமிட்டு பாட வேண்டும்
எண்ணம் என்னும் சிட்டு தான் ரெக்கை கட்டி கொள்ளாத
எட்டு திக்கும் தொட்டு தன் எட்டி பாய்ந்து செல்லாத
Rajathi Raja - Malayala Karayoram