Pages

Search This Blog

Showing posts with label Uyire. Show all posts
Showing posts with label Uyire. Show all posts

Friday, October 25, 2013

உயிர் - தக தய்ய தய்ய தய்யா

காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா
பாதகத்தீ காத்திருக்கா மனச அறிவீகளா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா
ஒரு பச்சைக் குயில் பறந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா

தக தய்ய தய்யா தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்யா தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

அவள் கண்களோடு இரு நூறாண்டு
மூக்கின் அழகோடு முன்னூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூறு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததைப் போல்
அந்த மாய மகள் இன்று மறைந்துவிட்டாள்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்ஷம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா

(நெஞ்சு)

ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலறையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ

(தக தய்ய)

(நெஞ்சு)

(அவள் கண்களோடு)

(தக தய்ய)

(தக தய்ய)

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

Uyire - Thaiyya Thaiyya

உயிர் - நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே

(நெஞ்சினிலே)

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

(தங்கக்)

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்

(நெஞ்சினிலே)

Uyire - Nenjinile Nenjinile

Tuesday, October 22, 2013

உயிரே - இருபூக்கள் கிளை

இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே சந்தோஷ கண்ணீரே

உன் பார்வை பொய் தானா
பெண்ணென்றால் திரை தானா
பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத்தாபம் உண்டு
பேராசை தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில்  கண்ணில் இன்ப
கண்ணீரே...
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே....

பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணை சுற்றும் கனவு
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மந்தரா நீ நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே

Uyire - Iru Pookkal Kilai Maela

உயிரே - பூங்காற்றிலே

ஓ.. கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
(கண்ணில்..)

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)

(கண்ணில்..)
(கண்ணில்..)
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..
(பூங்காற்றிலே..)

Uyirae - Poongkaatrilae

Followers