Pages

Search This Blog

Showing posts with label Thulladha Manamum Thullum. Show all posts
Showing posts with label Thulladha Manamum Thullum. Show all posts

Monday, December 2, 2013

துள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடு எனவே வானவில்

தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கேலி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு..)

Thulladha Manamum Thullum - Thodu Thodu Enave

Sunday, October 13, 2013

துள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

கண் இல்லை என்றாலோ நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது
குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா?
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்திவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

உயிரொன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே
உயிரென்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது
ரகசியம் காண்பதே நம் அவசியம் ஆனது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை

Thulladha Manamum Thullum - Innisai Paadivarum

Thursday, October 10, 2013

துள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஒ...ஹோ... ஒ...ஹோ... ஒ...ஹோ...
ஹே... ஹே... ஹே...

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வநிதை உந்தம் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ
மானிட பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஒ...ஹோ... ஒ...ஹோ...

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

ஜூலை மாதம் பூக்கும் கொன்றை பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் சொர்க்கம் காட்டுதே
தாஜ்மஹாலின் வண்ணம் மாற கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீயுள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காண வில்லையே
ஒ...ஹோ... ஒ...ஹோ...

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே....
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஹே... ஹே... ஹே...
ஹே... ஹே... ஹே...

Thulladha Manamum Thullum - Iruvathu Kodi

Wednesday, October 9, 2013

துள்ளாத மனமும் துள்ளும் - மேகமாய் வந்து போகிறேன்

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

உறங்காமலே உளறல் வரும் இது தானோ ஆரம்பம்?
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா... இல்லை அறிவானாதா...
காதல் சுகமானதா... இல்லை சுமையானாதா...
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

நீ வந்ததும் மழை வந்தது நெஞ்ஜெங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூ வாசம்
என் காதல் நிலா... என்று வாசல் வரும்...
அந்த நாள் வந்து தான்... என்னில் சுவாசம் வரும்...
என் அன்பே..... என் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே..... என் அன்பே.....
என் அன்பே..... என் அன்பே.....

Thullatha Manamum Thullum - Megamai Vanthu Pogiren

Followers