Pages

Search This Blog

Showing posts with label Aayirathil Oruvan. Show all posts
Showing posts with label Aayirathil Oruvan. Show all posts

Wednesday, January 4, 2017

ஆயிரத்தில் ஒருவன் - தாய் தின்ற மண்ணே இது

தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
நெல்லாடிய நிலம் எங்கே சொல்லாடிய அவை எங்கே
வில்லாடிய களம் எங்கே கல்லாடிய சிலை எங்கே
தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன் கண்கள்
காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக்கொடி பொற்த்த சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பது… ஓ…
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ மன்னன் ஆளுவதோ… ஓ… (தாய்)

நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்கலும் அதிர களிருகள் பிளிர
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அது வரை அது வரை… ஓ…
தமிழன் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாடே அழாதே
நூற்றாண்டுகளும் துரவை தாங்கி
உரையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழுவும் யாழே அழாதே (நெல்லாடிய)

தாய் தின்ற மண்ணே…. இது பிள்ளையின் கதறல்……
ஒரு பேரரசன் புலம்பல்…

Aayirathil Oruvan - Thaai Thindra Mannae

ஆயிரத்தில் ஒருவன் - பெம்மானே பேருலகின் பெருமானே

பெம்மானே பேருலகின் பெருமானே 
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ 
வெய்யோனே மெய்யுருகி வீழ்கின்றோம் 
வெந்தழிந்து மாய்கின்றோம் விதி இதானோ 
புலம் பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம் 
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீர் இல்லை 
கொங்கையிலும் பால் இல்லை கொன்றையோனே 
மூப்பானோம் உருவழிந்து முடமானோம் 
மூச்சுவிடும் பிணமானோம் முக்களோயே 
ஊண்டெய்தோம் ஊணுருவி உயிர் ஓய்ந்தோம் 
ஓரிழையில் வாழ்கின்றோம் உதய்கோனே 

நீராகி ஐம்புலனும் வேராகி 
பொன்னுலகம் சேறாகிப்போக மாட்டோம் 
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை 
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம் 
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும் 
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம் 
ஓம்……… ஓம்……… ஓம்……… 

பொன்னார் மேனியனே வெம்புலி தோல் உடுத்தவனே 
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ 
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சு உண்டவனே 
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ 
பெம்மானே பேருலகின் பெருமானே 
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ……

Aayirathil Oruvan - Pemmane

ஆயிரத்தில் ஒருவன் - மாலை நேரம் மழைத்தூரும் காலம்

மாலை நேரம் மழைத்தூரும் காலம் 
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன் 
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே 
சிலு மேகம் போலே மிதக்கிறேன் 
ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் 
வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே 
இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா 
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே 
ஓ காதல் இங்கே ஓய்ந்தது 
கவிதை ஒன்று முடிந்தது 
தேடும் போதே தொலைந்தது அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம் 
நெஞ்சின் உள்ளே பரவிடும் 
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே
இதம் தருமே

உன் கரம் கோர்க்கையில் 
நினைவு ஓராயிரம்
பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் 
காதலில் விழுந்த இதயம் மீட்க்க முடியாதது 
கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது 
ஒரு காலையில் நீயில்லை தேடவும் மனம் வரவில்லை 
பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என.. (ஓ காதல்)

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன 
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன 
இரு மனம் சேர்கையில் பிழைகள் 
பொறுத்துக்கொண்டால் என்ன 
இரு திசைப்பறவைகள் இணைந்தே 
விண்ணில் சென்றால் என்ன 
என் தேடல்கள் நீ இல்லை 
உன் கனவுகள் நான் இல்லை 
இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன...

Aayirathil Oruvan - Maalai Neram

ஆயிரத்தில் ஒருவன் - நெல்லாடிய நிலம்மெங்கே

பாடுவீரோ தேவரே
பரணி, கலம்பகம், உலா ஏதேனும்
ஈருகெட்ட எதிர் மறைப்பெயரெச்சம் ஏனும் அறிவீரோ

நெல்லாடிய நிலம்மெங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே
தாய்த்தின்ற மண்ணே, தாய்த்தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல் வெளித்தேடி
காய்ந்துக்கழிந்தனக் கண்கள்
காவிரி மலரின் கடிமனம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றில்
தேன்சுவைக் கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
உலி குடிப்பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக்கறிப்பொறிப்பதுவோ......
காற்றைக்குடிக்கும் பாமரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ, மன்னன் ஆளுவதோ

Aayirathil Oruvan - Nelladiya Niamenge

ஆயிரத்தில் ஒருவன் - இந்தப் பாதை எங்குப்போகும்

இந்தப் பாதை எங்குப்போகும்
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே......
இந்தத்தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்
நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்
நான் ஒரே இலைதான் இந்தக்காட்டில்
நான் ஒரே இலைதான் இந்தக்காட்டில்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ.........
இந்தப் பாதை எங்குப்போகும்

முதலும் முடிவும் இல்லை
இலக்குகள் எல்லைகள் இல்லை
கரையின் தொல்லை கடலில் இல்லை
கடலும் மறைந்தால் மனம் இல்லை
ஆடி கூத்தாடி நீ பிரிந்தால் ஏது சோகம்
உலகை பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்

ஓடம் நதியில் போகும் நதியும் ஓடமே போகும்
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை
நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை
மரங்கள் இங்கு பேசும் பனித்துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா.......
நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்
நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்

Aayirathil Oruvan - Indha Padhai

ஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆசை தான்

உன் மேல ஆசை தான்

ஆனது ஆகட்டும் ச்சேஞ் யு பேபி
போனது போகட்டும் ஜூ ஜூ பேபி

இது கனவு தேசம் தான்

நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டேக்
கிடைத்ததை எடுப்பவன் ஜூ ஜூ பேபி

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே (உன்)

என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா

வீசாத கேள்வி தாம்ப்பா துடிப்பான ஆளு நீப்பா

கடல் ஏறும் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா

என் பொற்தாமரையும் சாயும்
நடு சாமம் நிலவு காயும்
வேஷம் நாணம் தேகம் மேல் தொறித்து
ஊசி போலே தோளை இர்ப்பாய்

மனிதன் ஓட்டவீடடா வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா

என் ஆச ரோசா…….

கட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ……

ஈசான்னாலும் சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை உயிர்ப்பாய்

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே

Aayirathil Oruvan - Un Mela Aasadhaan

Followers