Pages

Search This Blog

Showing posts with label Thegidi. Show all posts
Showing posts with label Thegidi. Show all posts

Wednesday, December 28, 2016

தெகிடி - யார் எழுதியதோ எனக்கென

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை 
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே 
பறந்தேன் .. பறந்தேன் ..

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை 
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே 
பறந்தேன் .. பறந்தேன் ..

நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்
ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா 
விடிவா விடிவா ... 
விடிவா விடிவா ..

Thegidi - Yaar Ezhuthiyatho

தெகிடி - விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து (2)

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே  நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல்
 நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போனேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் 
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் ....

Thegidi - Vinmeen Vithaiyil

Followers