வானவில்லே வானவில்லே
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளிவந்த வண்ணங்களை
எங்கள் நெஞ்சில் நீ தூவு!
சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய்த் தென்றலே
வந்து நீ பாடு ஆராரோ..!
எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ..!
எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை உண்டு!
ஜாதி என்ன கேட்டுவிட்டு
தென்றல் நம்மை தொடுமா
தேசம் எது பாத்துவிட்டு
மண்ணில் மழை வருமா...
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது...
எங்கிருந்து சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
இந்தக் கூட்டில் நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
தாய்ப் பறவை சேகரித்து
ஊட்டுகின்ற உறவு
அதில் தானே வாழ்கிறது
உயிர்களின் அழகு!
உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே..
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது!
Ramanaa - Vaanavillae Vaanavillae