Pages

Search This Blog

Showing posts with label Boomerang. Show all posts
Showing posts with label Boomerang. Show all posts

Friday, December 7, 2018

பூமராங் - தேசமே கண் முழிச்சிக்கோ ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ

தேசமே கண் முழிச்சிக்கோ
ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ
பேர் வேண்டாம்
மதம் சாதி வேண்டாம்
உசுர ஒண்ணாக்கி காட்டு

கடவுளும்
அந்த கவர்ண்மெண்ட்டும்
ரொம்ப ஒசரத்தில்
இங்கே இருக்கு பார்
சேர்ந்தா தான் நெடுந் தூரம் கேட்கும்
குரலை நீ ஏத்தி காட்டு

மரம் செடி மனுஷென
மறுபடி வெதைச்சிடுவோம்
தடை வந்த ஒரே அடி
நொடியிலே முடிச்சிடுவோம்

தடி வெச்சு கலைச்சிட
நெனச்சிட சீறிடுவோம்
கடல் கரை சொல்லும் கதை
சரித்திரம் ஆக்கிடுவோம்

இந்த கூட்டம் போனாலும ஓ
எங்க கூச்சல் போகாது

விவசாயி இல்லயெனா
எங்க கை விரிப்போம்
டேய் அவன் வாழ்வ சொரண்டாத
தடுத்து தோல் உரிப்போம்

காவேரி இல்லையெனா
வேர்வையில் நீர் எடுப்போம்
ஆனாலும் ஒரு நாலு
எங்க உரிமைய மீட்டு எடுப்போம்

காத்தோடு தான் தாளம்
தட்டி வந்துட்டோம்
கம்மாயில மீனா முங்கி வந்துட்டோம்
இந்த நெல்லோட நிழல
நம்பி வந்துட்டோம்
தாய் மண்ணோட
மடியில வாழுறோம்

நம்ப பொருள் நாசமாச்சி
அங்க வேற நாட்டில்
போய் வல்லரசு ஆக்குறோமே
வாரத்தில எட்டு நாலு
அங்கே வேலை செஞ்சு
நம்ப ஆவியை போக்குறோமே
அவன் லாபத்த ஏத்துறோமே

கார்ப்ரேட்டு ஷீப் ரேட்டு
சில அடிமை தலைகல செய்துடா
உன் நோட்டு கை நாட்டா
ஒரு அட்டை பூச்சியா தின்னுதுடா
ஆனாலும் உன்னை ஜெயிச்சா
திமிர் ஒடம்பு
வேர்வையில மின்னுதுடா

என்ன இல்ல நம்ம மண்ணில்
வெதைச்சத அறுத்துகடா
சோறு தந்த அம்மா இவ
கலப்பைய வாங்கிக்கடா
இவ கலப்பைய வாங்கிக்கடா

தேசமே கண் முழிச்சிக்கோ
ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ
பேர் வேண்டாம்
மதம் சாதி வேண்டாம்
உசுர ஒண்ணாக்கி காட்டு

கடவுளும்
அந்த கவர்ண்மெண்ட்டும்
ரொம்ப ஒசரத்தில்
இங்கே இருக்கு பார்
சேர்ந்தா தான் நெடுந் தூரம் கேட்கும்
குரலை நீ ஏத்தி காட்டு

மரம் செடி மனுஷென
மறுபடி வெதைச்சிடுவோம்
தடை வந்த ஒரே அடி
நொடியிலே முடிச்சிடுவோம்

தடி வெச்சு கலைச்சிட
நெனச்சிட சீறிடுவோம்
கடல் கரை சொல்லும் கதை
சரித்திரம் ஆக்கிடுவோம்

இந்த கூட்டம் போனாலும ஓ
எங்க கூச்சல் போகாது

விவசாயி இல்லயெனா
எங்க கை விரிப்போம்
டேய் அவன் வாழ்வ சொரண்டாத
தடுத்து தோல் உரிப்போம்

காவேரி இல்லையெனா
வேர்வையில் நீர் எடுப்போம்
ஆனாலும் ஒரு நாலு
எங்க உரிமைய மீட்டு எடுப்போம்



Boomerang - Desamae Kann Mulichikko Oru Kootamai

பூமராங் - முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன்

முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்

கடிகாரம் சொல்லாத
நொடி நேரம் உண்டாக்கி
அதில் ஏறி காதல் சொல்கின்றேன்

உன்னை பார்த்தால்
அணில் ஆகிறேன்
விளையாட மணல் ஆகிறேன்
முகையே

இதமே அறியா
ஒரு பாதி வாலிபம் கடந்தேன்
இதழின் மழையில்
அந்த பாவம் யாவையும் களைந்தேன்

முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்

யாரோஉரையாடும் போதும்
நீ என்றே பார்க்கிறேன்
வீட்டில்உன்னை பொம்மையாக்கி
என் கைகள் கோர்க்கிறேன்

நாளும்உன் மூச்சிழுத்து
நான் வாழ பார்க்கிறேன்
உன்னை கொண்டாடும்
ஒரு சொல் ஆகிறேன்

விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே யேயே

ஓடும்உன் கால் தடங்கள்
ஒவ்வொன்றாய் ஏறினேன்
ஏனோஒவ்வொன்றின் மீதும்
ஒரு நிமிடம் வாழ்கிறேன்

நீயாய்என் பேர் உதிர்த்தால்
கொண்டாடி தீர்க்கிறேன்
நீராய்உன் தோள் குதிக்க
மன்றாடினேன்

விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே



Boomerang - Mughaiyazhi Pennodu Azhagaadi Pgindren

பூமராங் - நம் உயிர் வானிலே நிலவாய் முகம் தேயுமே

நம் உயிர் வானிலே
நிலவாய் முகம் தேயுமே
உன் முகம் தேடியே
புதிதாய் உயிர் பூக்குமே

விழுந்தாய் விழுந்தாய்
மழை போல் விழவே
விதை போல் நீ எழுந்தாய்
நிமிர்ந்தாய் வான் தொடவே

தீயிலே பூக்குமே
நாளையின் ஒளியே
இருள் முகம் திறப்பதால்
விடியுமே விடியுமே

உயிரின் உதிரம்
வலித்தாலே
உயிர் கண்கள் திறந்திடுமே
நிழலின் பூ முகம் உணர்ந்தாலே
புது நிஜங்கள் பிறந்திடுமே

விழுந்தாய் விழுந்தாய்
மழை போல் விழவே
விதை போல் நீ எழுந்தாய்
நிமிர்ந்தாய் வான் தொடவே

தீயிலே பூக்குமே
நாளையின் ஒளியே
இருள் முகம் திறப்பதால்
விடியுமே விடியுமே



Boomerang - Vaan Thodave

Followers