பெண் : ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
பெண் : உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா
பெண் : உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்
ஆண் : ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா (இசை)
பெண் : ஆளை முன்னும் பின்னும் ஆசை பின்னும் பின்னும்
காதல் பெண்மைக்கு இங்கு சோதனை (இசை)
ஆண் : தேடும் இன்னும் இன்னும் நூறு வண்ணம் வண்ணம்
மோகம் சுட்டதென்ன ஜீவனை
நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை
பெண் : மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேற யார் துணை
ஆண் : காதலில் நாணம் முடிந்துவிடாது
பெண் : ஆ..ஆ..ஆ ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
பெண் : கைகள் பட்டு பட்டு ஆசை மொட்டு விட்டு
தேகம் விட்டு விட்டு கூசுதே (இசை)
ஆண் : பெண்மை கட்டு பட்டு நாளும் வெட்கப்பட்டு
நாணம் தொட்டு தொட்டு பூசுதே
பெண் : ஏங்கும் தலையணைக்கு ஆளை தேடினாய்
ஆண் : தூங்கும் போதிலும் கனவு வந்து சேலை மூடினாய்
பெண் : பனி துளி ஈரம் பூவுக்குள் தாவும்
ஆண் : ஆ..ஆ..ஆ ஓ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
பெண் : உன் சூரியன் மார்பிலே ஒரு வானவில் சாய்ந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் சேர்ந்ததா
பெண் : உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்
பெண் : ஓ ரங்கா நாதா
ஆண் : ஸ்ரீரங்க நாதா
Nesam - O Ranganatha