Pages

Search This Blog

Showing posts with label Mullum Malarum. Show all posts
Showing posts with label Mullum Malarum. Show all posts

Wednesday, January 4, 2017

முள்ளும் மலரும் - அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை

வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம் 
பாடும் பாடல் என்ன சித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே
சிங்காரம் பார்வை சொல்லும் சேதியல்லவோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே 

நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை தேடும் தேவையென்ன
பார்த்தாளும் ஒரு ராணி பாலாடை இவள் மேனி கூறும் ஜாடை என்ன 
ஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே

Mullum Malarum - Adi Penney

முள்ளும் மலரும் - நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும்

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 

பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு 
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 

பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு 
சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு 
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா 
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா 
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 

பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு 
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும் 
அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல 
அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல 
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு 
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க 
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா 
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா 
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

Mullum Malarum - Niththam Niththam Nellu

Tuesday, January 28, 2014

முள்ளும் மலரும் - ராமன் ஆண்டாலும்

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தாண்ட என் மனசுக்கு ராஜ
வாங்குங்கட வெள்ளியில் கூஜா
நீ கேட்ட கேட்டத கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுகொட

யானையை கொண்டாங்க குதிரையை கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கனும் தோரணமாக
ஏன்டா டேய் ராணியை கூப்டு அவளோட செடியை கூப்டு
எ மதுரை ராஜ்ஜியம் என்னுது உனக்கொரு பாதியை கொடுக்கிறேண்ட

பொன்னா பூ பூத்து வைரம் காயாக கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு ப்சோகம் விளையும் லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன் மனசிருக்கு போழைசி பாக்குறேன்
எ போன போகுது வேலை உனக்கொரு வேலைய கொடுக்கிறேண்ட

ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்கற சாமியை பார்த்து கேளுங்கட

Mullum Malarum - Raaman Aandaalum

Wednesday, October 23, 2013

முள்ளும் மலரும் - செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில்...

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்பூவில்...

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம்பூவில்...

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
செந்தாழம்பூவில்...

Mullum Malarum - Senthalam Poovil Vanthadum

Followers