Pages

Search This Blog

Showing posts with label Idaya Kovil. Show all posts
Showing posts with label Idaya Kovil. Show all posts

Thursday, December 29, 2016

இதயக்கோயில் - யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னைத் தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போராடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

வான் மேகம் மோதும் மழைதனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்
ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையைத் தாண்டுமோ
நியாயங்கள் வாய் மூடுமோ
தெய்வமில்லை என்று போகுமோ

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ?
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ

Idhaya Kovil - Yaar Veetu Roja

இதயக்கோயில் - பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்

பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு இங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

காதல் பேசும் தாழம் பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீ தானே தாலாட்டும் நிலவே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்
சோர்ந்த பொழுது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்

பாரிஜாதம் பாயும் போதும்
பால் நிலா வானிலே காதல் பேசும்..
கூரை தூக்கம் ஆளும் போது
பார்வைகள் பேசுதே பாவையோடு…
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நான் தானே தாலாட்டும் நிலவு
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்
சோர்ந்த பொழுது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

Idhaya Kovil - Paattu Thalaivan

இதயக்கோயில் - ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு

ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு அட
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு
ஆண் குருவி தான் இறையைத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டை தேடி ஆண் குருவி தான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தபக்கம் குருவிகூடு

அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது
இங்கே அது வந்தால் பெருங்குற்றம் வருது
அங்கே ஒரு பெட்டை பல முட்டை இடுது
இங்கே பல பெட்டை விரல் தொட்டால் சுடுது
கண்ணாடி மீனா பின்னாடி போனா
கண்ணால முறைப்பாளே
என்னான்னு கேட்டு கூச்சல்கள் போட்டு
வில்லாட்டம் விறைப்பாளே
நாள்தோறுமே உறவைக்காட்டும் பண்பாடிடும் குருவி கூட்டம் நான் தான்..
(ஊரோரமா ஆத்துப்பக்கம்)

அங்கே ஒரு சொற்கம் அது இங்கே வருமோ
இங்கே பல வர்க்கம் இது இப்போ தருமோ
எல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவை
கண்ணும் இள நெஞ்சும் அதில் காணும் உறவை
பெண்பார்க்கும்போதே பேரங்கள் பேசும்
ஆண் வர்க்கம் அங்கேது
அம்மாடி வேண்டாம் கல்யாண ஆசை
நம்மாலே ஆகாது
நாம்தான் அந்த பறவை கூட்டம் நாள்தோறுமே ஆட்டம் பாட்டம் வா..வா..
(ஊரோரமா ஆத்துப்பக்கம்)

Idhaya Kovil - Oororama Aathupakkam

இதயக்கோயில் - கூட்டத்துலே கோவில் புறா

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

ஆ ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ ஆ…
ச ப க ம ப… ச ப க ம ப… ப ச நி த நி த ப…

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன் ஆசை என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே…
பூங்குயிலே உந்தன் பாதையிலே ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

தத்தித் தகதாம் தளாங்கு தகதாம் தரிகிட தகதாம்
தஜம் தஜம் தஜம் தஜம்

ஆ ஆ ஆ… ஆ ஆ ஆ…
நி க த… ச ரி க… ச க ரி க ப… த ச… நி த…

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால் கானமழை வருமோ
தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில் வான்மழை போல்
இந்தப் பாவலன் நெஞ்சினில் வாழிய வாழியவே

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

ச க ம ப த நி ச நி ச க ம
கூட்டத்துலே கோவில் புறா
நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
க ம க ம க ச க ம ப ம க ச ப ப நி நி த த ச ச நி நி க க ப த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா

தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம்
தித் தகிட தகிட தகிட தகிட
தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிட தரிகிடதத்
திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம்
தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம்
திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

Idhaya Kovil - Kootathilae Kovil Pura

இதயக்கோயில் - இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

Idhaya Kovil - Idhayam Oru Kovil

இதயக்கோயில் - நான் பாடும் மௌன ராகம்

நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்…..

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

Idhaya Kovil - Naan Paadum Mouna Raagam

இதயக்கோயில் - வானுயர்ந்த சோலையிலே

வானுயர்ந்த சோலையிலே 
நீ நடந்த பாதையெல்லாம் 
நானிருந்து வாடுகின்றேன் 
நா வறண்டு பாடுகின்றேன்

(வானுயர்ந்த சோலையிலே)

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடியென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

(வானுயர்ந்த சோலையிலே)


ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே 
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி 
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதையானதடி

(வானுயர்ந்த சோலையிலே)

Idhaya Kovil - Vaanuyarntha Solaiyile

Followers