Pages

Search This Blog

Showing posts with label Payanangal Mudivathillai. Show all posts
Showing posts with label Payanangal Mudivathillai. Show all posts

Monday, January 30, 2017

பயணங்கள் முடிவதில்லை - எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய

எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய ?
நான் பார்த்த பாக்காமலே போறிய ?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல..அள்ளிக்கலாம் வா புள்ள ..
எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய?நான் பார்த்த பாக்காமலே போறிய?

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம..
அணைக்க துடிச்சிருக்கேன்..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு ..
தனிச்சு தவிச்சிருக்கேன் ..

ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம ..
அணைக்க துடிச்சிருக்கேன் ..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு..
தனிச்சு தவிச்சிருக்கேன்..

தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா ?
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா ..

மாருல குளிருது சேர்தென அணைச்சா ..
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ ..ஹே ..

ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

நான் போறேன் முன்னால ..நீ வாட பின்னால ..
நாயகர் தோட்டத்துக்கு ..

பேசாதே கண்ணாலே ..என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு ..

நான் போறேன் முன்னால..நீ வாடா பின்னால..
நாயகர் தோட்டத்துக்கு..

பேசாதே கண்ணாலே..என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு..

சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது ..
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது ..

பவள பவள பவள வாயில தெரிகிற அழகா ??? ..
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது ..
ஹே..ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

Payanangal Mudivathillai - Hey Aatha

பயணங்கள் முடிவதில்லை - ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா புது

(ராக)

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல் கவிதை அரங்கேறுமோ (2)
தேவி உன் கொவில் வாசல் முன்னலே
காவியம் தேனென பூமியில் முதல் முதல்

(ராக)

ஆனந்த கங்கை வெள்ளம் பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும் அம்பிகைக்கே சொந்தம் 
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க கற்ற வித்தை என்றும் செழிக்க (2)
முத்து ரத்தினம் சிந்தும் இத்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நனைவாய்
புது ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

Payanangal Mudivathillai - Mudhal Mudhal Raaga Deepam

பயணங்கள் முடிவதில்லை - வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன்

வைகறையில்  வைகைக்கரையில்  வந்தால்  வருவேன்  உன்  அருகில் 
உன்  நினைவில்  நெஞ்சம்  வான்  வெளியில்  நாளும்  நடத்தும்  ஊர்வலங்கள் 

(வைகறையில் )

உன்  நினைவே  எனக்கோர்  சுருதி  உன்  கனவே  எனக்கோர்  கிருதி 
உன்  நினைவில்  மனமே  உருகி  வாடுதம்மா  மலர்  போல்  கருகி 
பலப்  பல  ஜென்மம்  நான்  எடுப்பேன்  பாடல்கள்  கோடி  நான்  படிப்பேன் 
அன்பே  உனக்கே  காத்திருப்பேன் ...ஆ ...

(வைகறையில் )

ஆயிரம்  ஆயிரம்  ஆசைகளை  ஆசையில்  உன்னிடம்  பேச  வந்தேன் 
ஆவியில்  மேவிய  கேள்விகளை  கேளென  உன்னிடம்  கூற  வந்தேன் 
நினைவுகள்  ஏனோ  மறைகிறதே  கனவுகள்  ஏனோ  கலைகிறதே 
நிழல்  போல்  உன்னைத் தொடர்கிறதே ...ஆ ..

(வைகறையில் )

Payanangal Mudivathillai - Vaigaraiyil Vaigaikaraiyil

பயணங்கள் முடிவதில்லை - தோகை இளமயில் ஆடி வருகுது

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

(தோகை)

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

(தோகை)

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

(தோகை)

Payanangal Mudivathillai - Thogai Ilamayil

பயணங்கள் முடிவதில்லை - சாலை ஓரம் சோலை ஒன்று

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னை பார்த்தால் குளிரடிக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
ஹே பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை பட்டு வண்டுகள் கொட்டுகின்றதே
இப்போது

சாலை ஓரம் சோலை ....

கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழுத்ததினால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
பேசும் கிள்ளையே ஈர முல்லையே நேரமில்லையே
இப்போது

சாலை ஓரம் சோலை ....

Payanangal Mudivathillai - Salaiyoram Oram

பயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ
கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

(மணி ஓசை)

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேருமோ

(மணி ஓசை)

Payanangal Mudivathillai - Mani Oosai

பயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

Payanangal Mudivathillai - Ilaya Nilaa Poli

Followers