தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
(தோகை)
கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
(தோகை)
பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலும் பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
(தோகை)
Payanangal Mudivathillai - Thogai Ilamayil