Pages

Search This Blog

Showing posts with label Anbe Aaruyire. Show all posts
Showing posts with label Anbe Aaruyire. Show all posts

Thursday, December 29, 2016

அன்பே ஆருயிரே - வருகிறாய் தொடுகிறாய்

வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால் பொய் சொல்கிறாய்
போ போ

வர வரத்தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற காதல் கடங்காரி
அடி உலகில் இவளும் உனைப்போல் இல்லையே அழகிய கொலைகாரி
குளிர் நிலவினை நெருப்பாய் நினைக்கிற வெறுப்பாய் நீ ஒரு அசடனடா
அது உனக்கென உயில்தான் எழுதிய மயில்தான் நீ இதை அனுபவிடா
ஹையோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
ஏண்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்
உயிர் விடச்சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச்சொன்னால் உனை விட மாட்டேன்
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று உறுதியை தந்து உதருவதென்ன
ஹோ தவித்தது போதும் தனிமையில் இருக்கவிடு என்னை இருக்கவிடு
இருக்கவிடு அன்பே இருக்கவிடு
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்

விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்
அடி இதயக்கதவை இழுத்தே அடைத்தேன் எதுக்கதை தட்டுகிறாய்
வங்க கடற்கரை மணலில் மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சா
உயிர் காதலை வளர்க்க பேசிய பேச்சு காத்துல பறந்தாச்சா
ஏதோ ஏதோ நான் ஏதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்
தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனையன்றி இம்மி உறுதுணை இல்லை
காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்கவிடு உன்னை மறக்கவிடு
மறக்கவிடு அன்பே மறந்துவிடு
மறக்கவிடு
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால் பொய் சொல்கிறாய்
போ போ

Anbe Aaruyire - Varugiraai

அன்பே ஆருயிரே - தழுவுது நழுவுது நழுவுது தழுவுது

தழுவுது நழுவுது நழுவுது தழுவுது
கதை ஒன்று எழுது கண்ணளா.... 
ஒரு கணம் ஊடல் மறுகணம் கூடல் ! 
இரண்டையும் கலந்த காவியம் !! 
ஒரு பக்கம் காதல் மறு பக்கம் மோதல் 
இரு பக்கம் கொண்ட நாணயம் நாம் !! 
கதை ஒன்று எழுதுது கண்ணளா 
இலக்கிய மாலை பொழுதிது தான் !! 
ஆடவன் அருகினிலே
ஓ ... ஆஹ் .. ஏழு ... வருகையிலே !
நாணமும் விடை பெருகுதே
ஓர் நாடகம் நடை பெருதே !!
நூல் ஆடை சரிகிறதே !
மேல் ஆடை தெரிகிறதே !
அதை மூட விழைகிறது
மனம் தடுமாறி தவி தவிக்குது !!
ஆதியும் அந்தமும் அம்மம்மா
ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே
ஜாதக கணக்கு படி
ஒரு ஜோடியும் கலைந்ததடி
முட்டுதல் வழக்கம் அடி !
பின் ஒட்டுதல் பழக்கம் அடி !
நாள் தோறும் அடிச்சிக்கலாம் ஆனாலும் அணைச்சுக்கலாம்..!
வாழ்வோமா விசித்திரமாய் தினம் சலிக்காமல் சிறுப்பிள்ளை தனமா !!
நாள் ஒரு உத்தமும் முத்தமும் என்று போகட்டும் எப்போவும் இப்படியே !!

Anbe Aaruyire - Thazhuvudu

அன்பே ஆருயிரே - என் அன்பே ஆருயிரே

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை


நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே

(ஆறரை கோடி பேர்களில் ஒருவன்)

கண்ணீ­ர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன் 
புன்னகை என்னும் பொன்னகையைத்தான்
முகமெங்கும் மீட்டு வைப்பேன்
உங்கள் மகிழ்ச்சியைப் பாட்டில் வைப்பேன்
விட்டெரிந்த பந்து போலே
உள்ளம் துள்ளட்டும்
பொத்திப் பொத்தி வைத்து 
பழக்கமுமில்லை வழக்கமுமில்லை
மனமொரு திறந்த புத்தகம் தான்
நல்ல மனம் தான்
வெல்லும் தினம்தான்


என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே


ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்

என் அன்பே ஆருயிரே 
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே 
என் அன்பே அன்பே ஆருயிரே

Anbe Aaruyire - Anbe Aaruyire

அன்பே ஆருயிரே - மயிலிறகே மயிலிறகே

மயிலிறகே... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...

உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...
மயிலிறகாய் மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல

மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...

மதுரை பொதிகை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா...
இங்கு வைகையில் வைத்திடு கை

பொதிகை மலையை பிரித்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனசிறையில்...

ஓர் இலக்கியம் நம் காதல்..
வான் உள்ள வரை வாழும் பாடல்

மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....

உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே....

(இசை..)

தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்...
கவி ஆற்றிட நீ வருவாய்........

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா........?

பால் விளக்கங்கள் நீ கூறு
ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கேளு

மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....

உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...

மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய் மெல்ல...

வருடுகிறாய்....மெல்ல

வருடுகிறாய் மெல்ல...

Anbe Aaruyire - Mayiliragae Mayiliragae

அன்பே ஆருயிரே - மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய்

மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடைக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடைக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை

ஓ ஹோ இதழ்கள் நான்கும் கலந்து இங்கு இயற்றிடும் கவிதை முத்தம்
எதுகை அழகை காட்டும் இங்கு இச்சென எழும் சத்தம்
உதடும் உதடும் எதுக்கு இங்கு உரசுதல் காதல் யுத்தம்
கனலாய் கனலாய் வா நீ நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம்
என் உதட்டிலே ஏன் காயம்
போர் களத்திலே அதுதான் நியாயம்
மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடைக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை

உதடு உதடு மேல Come In and Get On Your Way
உதடு உதடு மேல Make It and Make Into Square
உதடு உதடு மேல Fill In and Fill In the Juice
உதடு உதடு மேல This One is For You
உயிர்கள் உலகின் உயிலை தம் உதடுகள் மூலம் மறையும்
மனிதம் காக்கும் புனிதம் சிலர் தவறென கூறிடுவார்
பாசம் பேசும் மொழியை ஆபாசம் என்பது தவறு
இதற்கோர் தணிக்கை எதற்கு இது அன்பின் மாநாடு
உன் உதடுகள் தாங்காது
நான் கொடுத்தது வலிதான் எது
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடைக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை

Anbe Aaruyire - Maram Kothiye

Followers