Pages

Search This Blog

Thursday, December 29, 2016

அன்பே ஆருயிரே - என் அன்பே ஆருயிரே

ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை


நாம் இருவரும் சேரும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
நாம் தொட்டது எதுவும் அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே

(ஆறரை கோடி பேர்களில் ஒருவன்)

கண்ணீ­ர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை
வண்ணத்தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆளவும் செய்வேன் 
புன்னகை என்னும் பொன்னகையைத்தான்
முகமெங்கும் மீட்டு வைப்பேன்
உங்கள் மகிழ்ச்சியைப் பாட்டில் வைப்பேன்
விட்டெரிந்த பந்து போலே
உள்ளம் துள்ளட்டும்
பொத்திப் பொத்தி வைத்து 
பழக்கமுமில்லை வழக்கமுமில்லை
மனமொரு திறந்த புத்தகம் தான்
நல்ல மனம் தான்
வெல்லும் தினம்தான்


என் அன்பே ஆருயிரே
என் அன்பே ஆருயிர் நீயே


ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்
அ'னா நீங்கள் ஆவன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
அந்த சந்திரனும் ஒரு நண்பன்
அந்த சூரியனும் ஒரு நண்பன்
இவை யாவும் படைத்த ஒருவன்
அந்த இறைவன் எனக்கு நண்பன்

என் அன்பே ஆருயிரே 
என் அன்பே ஆருயிர் நீயே
என் அன்பே ஆருயிரே 
என் அன்பே அன்பே ஆருயிரே

Anbe Aaruyire - Anbe Aaruyire

Followers