Pages

Search This Blog

Showing posts with label Gokulathil Seethai. Show all posts
Showing posts with label Gokulathil Seethai. Show all posts

Friday, October 11, 2013

கோகுலத்தில் சீதை - கோகுலத்து கண்ணா

என் நாவினில் இருப்பது சரஸ்வதியே
என்னை பாட வைப்பது கணபதியே

கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானுமில்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணனின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

ஆசைகொரு ஆளானவனன்
ஆனந்தத்தின் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட
கோலங்களை கண்டானவன்
ஆடை அள்ளி கொண்டானவன்
அழகை அள்ளி தின்றானவன்
போதையிலே நின்றானவன்
பூஜைகின்று வந்தானவன்
அவன் உலா உலா உலா உலா தினம் தினம் பாரே
ஒரு விழா விழா விழா விழா வாழ்க்கையில் கேளேள்
கண்ணா உன்னை நாள் தோறுமே
கை கூப்பியே நான் பாடுவேன்

கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானுமில்லை ராமன் இல்லை
கோகுலத்தில் நானா

சோகமில்லை சொந்தம் தேவையில்லை
ராவணனின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே


ஆசைகொரு ஆளாகினான்
கீதையென்னும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான்
பாண்டவர்க்கு போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான்
திரெளபதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை கண்டு கை கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா வந்தது நேரில்
திருவிழா விழா விழா விழா ஆனது வீடே
என் வாழ்க்கையே பிருந்தாவனம்
நானாகவே நான் வாழ்கிறேன்


கோகுலத்து கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்
ருக்மணியை நீ கை பிடித்தாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
இந்த வீடுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பெளர்ணமியே
இந்த வீடுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பெளர்ணமியே

Gokulathil Seethai - Gokulathil Kanna

Followers