Pages

Search This Blog

Showing posts with label Deiva Thirumagal. Show all posts
Showing posts with label Deiva Thirumagal. Show all posts

Tuesday, November 5, 2013

தெய்வ திருமகள் - பபபாப்பா பாப்பபாப்பா

பபபாப்பா பாப்பபாப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பா அப்பாப்பாப்பா
புதுசாக பொக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

பபபாப்பா பாப்பபாப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பா அப்பாப்பாப்பா
புதுசாக பொக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

எதுக்கு கிருஷ்ணா இவ்ளோ பணம்
என்ன வாங்க போற

கண்ணுக்கு கண்ணுக்கு மை வாங்க
காலுக்கு கொலுசு தான் வாங்க
அப்புறம் ஏதோ சொன்னாங்க
ஐயய்யோ மறந்தேண்க்க
ஆ கை சட்டை வாங்க போறேன்
கவுனும்தான் வாங்க போறேன்
கடைத் தெருவ தேடி போறேன்
குதிரை மேலே

எல்லாம் பாப்பாவுக்குத்தானா
பானுவுக்கு ஒன்னும் இல்லையா

இருக்கு
ஆப்பிள் நான் வாங்க போறேன்
ஹார்லிக்ஸும் வாங்க போறேன்
அவள நான் தாங்க போறேன்
குழந்தை போல

கழுத்துக்கு கழுத்துக்கு மணி வாங்க
இடுப்புக்கு அருணாகொடி வாங்க
அப்புறம் ஏதோ சொன்னாங்க
ஆஹா இது தாங்க

ஓஹோ இதுவும் பானுக்கா
இல்ல பாப்பாவுக்கு

பபபாப்பா பாப்பபாப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பா அப்பாப்பாப்பா
புதுசாக பொக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

ஏன் கிருஷ்ணா
பாப்பா அப்பா மாதிரி இருக்கணுமா
அம்மா மாதிரி இருக்கணுமா

அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிரிக்கணுமே

இதான் அந்த அழகான சிரிப்பா

குழந்தை பிறக்க போது
எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவே?

சாக்லெட்டு வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன்
அப்புறம் சொல்றேன்

சரி குழந்தையோட என்ன பண்ணுவே

விளையாடி கூட்டி வருவேன்
பழம் விட்டு டூவும் விடுவேன்
அப்புறம் என்ன நான் செய்வேன்
பானுவ கேட்டு சொல்றேன்

ஆனா இனிமே பானுவோட விளையாட மாட்டியா?

பத்து மாசம் பொறுக்கணுமாம்
பாப்பா நல்லா வளரணுமாம்
அதுவரை சும்மா இருக்கணுமாம்
டாக்டர் சொன்னாங்க

டுடுடுடுடு..

Deiva Thirumagal - Pa Pa Pappa

தெய்வ திருமகள் - ஆரிரோ ஆராரிரோ

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு


முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூருதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

Deiva thirumagal - Aariro Aaraariro

தெய்வ திருமகள் - விழிகளில் ஒரு வானவில்

விழிகளில்  ஒரு  வானவில்
இமைகளைத் தொட்டுப் பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
என் தாய் முகம் அன்பே
உன்னிடம்  தோற்கிறேன்

நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மழங்குகிறேன்
கண்ணாடிப் போலத் தோன்றினாய்
என் முன்பு என்னைக் காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில் ....

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வேரிலே
மாலையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்றப் பின்னாலே
வீதி என்னாகுமோ
யார் இவன் ..யார் இவன்
ஓர் மாயவன்
மெய்யானவன் அன்பில்
யார் இவன் ..யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர்
இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ ..
என் தேதிப் பூத்த  பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ....

நான் unakkaagap பேசினேன்
நீ எனக்காகப் பேசுவாய்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்தக் கனவேங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பென்னும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன் தான் அட இப்போது நான்
பெண் ஆகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

Deiva thirumagal - vizhigalil oru vaanavil

Followers