Pages

Search This Blog

Showing posts with label Jeans. Show all posts
Showing posts with label Jeans. Show all posts

Monday, November 25, 2013

ஜீன்ஸ் - வாராயோ தோழி வாராய்

ஞானப் பழத்தைப் பிழிந்து…
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி
அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
ஏ பாட்டி என் ஸ்வீடி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி
(வாராயோ)


ஜீன்ஸ்ஸெல்லாம் மாட்டிக்கோ லிப்டிக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ
அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு
க்ளீண்டோண் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு
யார் நீ என்றால் மீஸ்ஸ் வோற்ள்ட் அல்ல மீஸ்ஸ் ஆள்ள் என்ரே நீ சொல்லிவிடு
(வாராயோ)


கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
எம் டிவி சேனலில் சஷ்டிக் கவசம் நீ பாடு
டூ பீஸ்சு உட போட்டு senநாத்து எடு பாட்டி
லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு கடைய விரிச்சி வட சுட்டு எடு ம்ம் ஒருவாட்டி
(வாராயோ)

Jeans - Varayo Thozhi

ஜீன்ஸ் - எனக்கே எனக்கா

எனக்கே எனக்கா..
நீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதா

ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பிஇப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
பைகில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா

ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
பேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா

முத்தமழையில் நனஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வாரம் கொடம்மா
(ஹைர)

அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்
நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னாகுமோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறியில் நீ காற்றைக் கிழிக்கிறாய் பிள்ளை மனம் பித்தானதோ
என்னாகுமோ ஏதாகுமோ
வாடைக் காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடி யுகம் போனால் என்ன காதலுக்கு எப்போஅதும் வயசாகாது
(ஹைர)


செர்ரி பூக்களைத் திருடும் காற்று காதில் சொன்னது லவ் யு
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது லவ் யு
உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா
இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது
(ஹைர)

Jeans - Enakkey Ennakkaa

ஜீன்ஸ் - அன்பே அன்பே கொல்லாதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
(அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
(அன்பே)

கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)

Jeans -  Anbae Anbae Kollathe

Tuesday, October 1, 2013

ஜீன்ஸ் - கண்ணோடு காண்பதெல்லாம்

ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ

(கண்ணோடு)

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

(கண்ணோடு)
(சுவரங்கள்)

Jeans - Kannodu Kaanbadhellaam

ஜீன்ஸ் - கொலம்பஸ் கொலம்பஸ்

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு...மாமே
கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு
கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு
லீவு லீவு லீவு வேண்டும் புதிய தீவு தீவு (2)
சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது
மிஷினெல்லாம் மனிதர்களாகச் சொல்லுது
கொல்லும் ராணுவம் அணு ஆயுதம் பசி பட்டினி கரி(?) பாலிடிக்ஸ்
பொல்யூஷன் ஏதும் புகுந்துவிடாத தீவு வேண்டும் தருவாயா...கொலம்பஸ்

(கொலம்பஸ்)

வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க
வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி
மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி
பறவையின் சிறகு வாடகைக்குக் கிடைத்தால் உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு
பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு
இன்று ஓய்வுதானே வேலை ஆனால் ஓய்ந்து போவதில்லை
இங்கு நிர்வாண மீன்கள் போலே நீந்தலாம்...கொலம்பஸ்

(கொலம்பஸ்)

ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா
ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா ஏ ஏ ஐலசா...மாமே

இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு
அலைனுரையை அள்ளி அவள் ஆடையைச் செய்யலாகாதா
விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா
வீக்கெண்டில் காதலி ஓக்கேன்னா காதலி டைம்பாசிங் காதலா பிரியும்வரை காதலி
வாரம் இரு நாள் வாழியவே...கொலம்பஸ்

(கொலம்பஸ்)

jeans - Columbus Columbus

ஜீன்ஸ் - பூவுக்குள் ஒளிந்திருக்கும்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

(பூவுக்குல்)

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)

பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

(கல்தோன்றி)
(பூவுக்குள்)

Jeans - Poovukkul Olinthirukkum

Followers