Pages

Search This Blog

Showing posts with label Mangai Maanvizhi Ambugal. Show all posts
Showing posts with label Mangai Maanvizhi Ambugal. Show all posts

Friday, December 21, 2018

மங்கை மான்விழி அம்புகள் - ஒரு நாள் தானே உன்னை பார்த்தேன்

ஒரு நாள் தானே
உன்னை பார்த்தேன் மறு
நாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில்
காண கனவானாலும் கண்
விழித்திருந்தேன்

உன் கருவிழி பார்வை
என்னை கவர கவர என் இரு
விழி பார்வை இங்கு செதற
செதற மஞ்சள் மயிலே
என்னை கொஞ்சும் குயிலே
நீ என்னை இங்கு தேடி வந்த
குறிஞ்சி பூவடி

பேசிய வார்த்தை
பேரிசையாக பேச மௌனம்
மெல்லிசையாக இயலும்
இசையும் நாடகமாக இரவும்
பகலும் நொடியில் போக
அய்யோ என்னை இந்த
காதல் படுத்தும் பாடு
போதுமடா

மஞ்சள் மயிலே
என்னை கொஞ்சும்
குயிலே



Mangai Maanvizhi Ambugal - Manjal Mayile 

மங்கை மான்விழி அம்புகள் - யார் இவள் விழிகளில் வழி

யார் இவள்
விழிகளில் வழி
சொல்லி போகிறாள்
தீண்டலில் திசை
எட்டும் மறந்தே
போகிறேன்

காற்றினில்
படர்ந்திடும் மயிலின்
தோகையே பின்னலில்
மலர் என வளந்திட
ஏங்கினேன்

யாரோ இவள் முன்
ஜென்மத்தின் கண்மணி
இவள் இவள் தான் அவள்
இந்த ஜென்மத்தின் முதல்
பெண்மையோ இதழினில்
சிணுங்களில் நூறாண்டு
வாழ்வேன் அடி விரல்களில்
நகங்களாய் வாழ்ந்தாலும்
போதுமே

யார் இவள்
விழிகளில் வழி சொல்லி
போகிறாள் தீண்டலில்
திசை எட்டும் மறந்தே
போகிறேன்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
இமைக்காமல் உன்னை
காப்பேன் உயிரே உறவாய்
ஆனால்

பாவை பார்வையை
பார்த்தாலே இதயம் நின்று
தான் துடித்திடுமே மீண்டும்
பார்வை இல்லை எனில்
துடிக்கும் இதயமும்
நின்றிடுமே

போகும் பாதையில்
பொழிந்த தூரலே முழுவதும்
நனைப்பாய் சாரலே வேண்டும்
காதலை விரும்பி தந்திடு
கருவென சுமப்பேன் மழையே
யார் இவள்

ஒரு நாள் தான்
உன்னை பார்த்தேன்
வாழ்வே நீயே ஆனாய்
யார் இவள் தீண்டலில்



Mangai Maanvizhi Ambugal - Yaar Ival Vizhigalil  

மங்கை மான்விழி அம்புகள் - நீ தோலை தூரத்தில் உன்னை நான் தேடினேன்

நீ தோலை தூரத்தில்
உன்னை நான் தேடினேன்
ஏன் கணவாகினாய்
எந்தன் வாழ்விலே

நீ தோலை தூரத்தில்
உன்னை நான் தேடினேன்
ஏன் கனவாகினாய்
எந்தன் வாழ்விலே

என் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வழி கூடுதே
குறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே
இருந்தும் மனம் தவிக்கின்றதே
ஒவ்வொரு அசைவிலும்
காதலை சொன்னேன்
உனக்கது புரியவில்லை
புரிந்தும் ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான் இல்லையா

ஒவ்வொரு அசைவிலும்
காதலை சொன்னேன்
உனக்கது புரியவில்லை
புரிந்தும் ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான் இல்லையா

என்னை நீ தான் ஏங்க வைத்தாய்
அருகில் இல்லை நீ
தொலைந்தாய் நீ
உன்னை தேட மலர் வாடுதே
தேடி மலர்கள் எங்கோ சென்று பூத்தது
பேசி வார்த்தை கணவாய் போனது
தேடி மலர்கள் எங்கோ சென்று பூத்தது
பேசி வார்த்தை கணவாய் போனது

உன் நினைவால் எனை வதைத்தேன்
நினைவே உயிரை தின்றது
உடல் மட்டும் தான் கிடக்கின்றேன்
உயிரே நீ இல்லை

என் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வழி கூடுதே
குறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே
இருந்தும் மனம் தவிக்கின்றதே

நீ தோலை தூரத்தில்
உன்னை நான் தேடினேன்
ஏன் கனவாகினாய்  எந்தன் வாழ்விலே



Mangai Maanvizhi Ambugal - Nee Tholai Thoorathil 

மங்கை மான்விழி அம்புகள் - உன் அருகினிலே எனை தோளைத்தேன்

உன் அருகினிலே எனை
தோளைத்தேன் நில ஒளியில்
என் இதயத்திடம் கேட்டது
யார் உன் இதயம்

தூளைந்திடுமோ நகர்ந்திடுமோ
கடந்து சென்ற நாட்கள் நேரம்
மறந்திடுமோ விலகிடுமோ
கடந்து சென்றால் ஆழகிய தோற்றம்

தூளைந்திடுமோ நகர்ந்திடுமோ
கடந்து சென்ற நாட்கள் நேரம்
மறந்திடுமோ விலகிடுமோ
கடந்து சென்றால் ஆழகிய தோற்றம்

நான் கேட்ட பின்பு தர
மறுத்தால் வலி உணர்தேன்

உன் அருகினிலே எனை
தோளைத்தேன் நில ஒளியில்
என் இதயத்திடம் கேட்டது யார் உன் இதயம்



Mangai Maanvizhi Ambugal - Un Aruginile Enai

மங்கை மான்விழி அம்புகள் - உயிரே என் உயிரே நினைவில் அவள் முகம் காட்டாதிரு

உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம் கடந்திடு
இமை மூடினாள் அவள் ஞாபகம்
விழி திறந்தாள் இவள் ஓவியம்
இது என்ன டா புது போதையா
ஒரு பாவையால் உயிர் போகுதே

என்னை நான் தெரியாமல்
உனக்குள்ளே தொலைத்தேனே
உண்னாமல் உறங்காமல் தவித்தேனே நான்
தினம் தோரும் உன்கூட
நெடுந்தூரம் நன் போக
விரலோடு விரல் சேர்த்து காப்பேனடி

ஒரு நாள் தானே உன்னை பார்த்தேன்
மறுநாள் நீயும் கனவில் வந்தாய்
தினமும் உன்னை கண்ணில் காண
கனவானாலும் கண்விழித்திருதேன்
உன் கருவிழி பார்வை என்னை கவர கவர
என் இரு விழி பார்வை இங்கு சிதற சிதற

மஞ்சள் மயிலே என்னை
கொஞ்சும் குயிலே
நீ இங்கு தேடி வந்த குறிஞ்சி பூவடி

பேசிய வார்த்தை பேரிசையாக
பேசா மௌனம் மெல்லிசையாக
இயலும் இசையும் நாடகமாக
இரவும் பகலும் நொடியில் போக
ஐயோ என்னை இந்த காதல்
படுத்தும் பாடு போதுமடா

உன் பெயரைத்தான் மொழியாக்கினேன்
உன் வாசம்தான் என் ஸ்வஸமே
உன்னோடு தன் நான் போகவே
கடிகாரமாய் உன்னை சுற்றினேன்
ஒரு பார்வை பாரேன்
ஒரு வார்த்தை கூரேன் 
அது போதும் பெண்னே
உயிரும் தாரேன்

எழுத்தில்லா கவியே
முல் இல்லா மலரே
பதில் சொல்லி போயேன் என் குறிஞ்சி பூவே
என் நாட்கள் எல்லாமே
உன் நிழலாய் வாழுவேனே
என் காதல் முழுவதும் உனக்காகத்தான்
கம்பனின் கவிகள் தோற்றிடும் வகையில்
காதலை வார்த்தையால் கோர்ப்பேனே நான்

உயிரே என் உயிரே
நினைவில் அவள் முகம் காட்டாதிரு
இரவே என் இரவே
நிலவின்றி உன் நேரம் கடந்திடு
இமை மூடினாள் அவள் ஞாபகம்
விழி திறந்தாள் இவள் ஓவியம்
இது என்ன டா புது போதையா
ஒரு பாவையால் உயிர் போகுதே



Mangai Maanvizhi Ambugal - Uyire En Uyire Ninaivil Aval 

மங்கை மான்விழி அம்புகள் - நிஜம் தானா பெண்ணே அருகினில்

நிஜம் தானா
பெண்ணே அருகினில்
வந்தாய் நானும் சிலிர்த்து
கொண்டேன் நெஞ்சம்
எல்லாம் நீதான்
பெண்ணே

இது போல என்றும்
வருவாயா பெண்ணே எதிர்
பார்த்து நின்றேன் நாட்கள்
எல்லாம் அன்பே

உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான்
பெண்ணே
நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன் நானே

இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன் பெண்ணே
உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன் நானே

ஏனோ உன்னை
நானும் கண்டேன் ஏனோ
ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

உரையாடும்
நொடிகளில் உறைந்து
போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக
பேசாத நொடிகளில்
லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன்
அனலாலே

உன்னோடு
நடக்கையில் விண்ணில்
பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக

வெண்ணிலவு
என்னை நீ மேகமாக
சூழ்ந்தாய் பெண் இவளை
நீதான் உன் கண்ணியத்தால்
வென்றாய்

சாலை ரயிலாய்
தினமும் நீ என்னில்
தொடர்ந்தாய்
காலை வெயிலாய்
முழுதும் நீ என்னில்
படர்ந்தாய்

மாலை மயிலே
தோகை நீ விரித்தாய் எனக்காய்
நானும் உனதே
இதில் என்ன கேள்வி

சிறு பூவில்
தேனை தேடும் வண்டாய்
நானே என் பாலை வனத்தில்
பூத்த முதல் ரோஜாவே என்
தேவை நீதான் அன்பே
உனக்காய் நானே உனக்குள்ளும்
நானும் வந்தால் சொல்லேன்
பெண்ணே

உரையாடும் நொடிகளில்
உறைந்து போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக பேசாத
நொடிகளில் லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன் அனலாலே
உன்னோடு நடக்கையில்
விண்ணில் பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக

உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான் பெண்ணே
நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன் நானே

இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன் பெண்ணே
உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன் நானே

ஏனோ ஹோஹோ
உன்னை நானும் கண்டேன்
ஏனோ ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

நிஜம் தானா பெண்ணே
அருகினில் வந்தாய்
நானும் சிலிர்த்து கொண்டேன்
நெஞ்சம் எல்லாம்
நீதான் பெண்ணே



Mangai Maanvizhi Ambugal - Nijam Thaana Penne Aruginil

Followers