Pages

Search This Blog

Friday, December 21, 2018

மங்கை மான்விழி அம்புகள் - நிஜம் தானா பெண்ணே அருகினில்

நிஜம் தானா
பெண்ணே அருகினில்
வந்தாய் நானும் சிலிர்த்து
கொண்டேன் நெஞ்சம்
எல்லாம் நீதான்
பெண்ணே

இது போல என்றும்
வருவாயா பெண்ணே எதிர்
பார்த்து நின்றேன் நாட்கள்
எல்லாம் அன்பே

உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான்
பெண்ணே
நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன் நானே

இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன் பெண்ணே
உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன் நானே

ஏனோ உன்னை
நானும் கண்டேன் ஏனோ
ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

உரையாடும்
நொடிகளில் உறைந்து
போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக
பேசாத நொடிகளில்
லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன்
அனலாலே

உன்னோடு
நடக்கையில் விண்ணில்
பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக

வெண்ணிலவு
என்னை நீ மேகமாக
சூழ்ந்தாய் பெண் இவளை
நீதான் உன் கண்ணியத்தால்
வென்றாய்

சாலை ரயிலாய்
தினமும் நீ என்னில்
தொடர்ந்தாய்
காலை வெயிலாய்
முழுதும் நீ என்னில்
படர்ந்தாய்

மாலை மயிலே
தோகை நீ விரித்தாய் எனக்காய்
நானும் உனதே
இதில் என்ன கேள்வி

சிறு பூவில்
தேனை தேடும் வண்டாய்
நானே என் பாலை வனத்தில்
பூத்த முதல் ரோஜாவே என்
தேவை நீதான் அன்பே
உனக்காய் நானே உனக்குள்ளும்
நானும் வந்தால் சொல்லேன்
பெண்ணே

உரையாடும் நொடிகளில்
உறைந்து போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக பேசாத
நொடிகளில் லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன் அனலாலே
உன்னோடு நடக்கையில்
விண்ணில் பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக

உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான் பெண்ணே
நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன் நானே

இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன் பெண்ணே
உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன் நானே

ஏனோ ஹோஹோ
உன்னை நானும் கண்டேன்
ஏனோ ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

நிஜம் தானா பெண்ணே
அருகினில் வந்தாய்
நானும் சிலிர்த்து கொண்டேன்
நெஞ்சம் எல்லாம்
நீதான் பெண்ணே



Mangai Maanvizhi Ambugal - Nijam Thaana Penne Aruginil

Followers