Pages

Search This Blog

Showing posts with label Iruvar. Show all posts
Showing posts with label Iruvar. Show all posts

Tuesday, January 28, 2014

இருவர் - வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)

Iruvar - Venilla Venilla

இருவர் - கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே...பயமில்லையே...
மனதினில் கரையில்லையே...குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...

(கண்ணைக் கட்டிக்)

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

(கண்ணைக் கட்டிக்)

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா

Iruvar - Kannai Kattikolathey

இருவர் - ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து கத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
காதலா காதலா உனைனான் விடமாட்டேன்
கைத்தலம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்
கண்கள் மீனாடை அழகு மீதாட விடவே விடமாட்டேன்

(ஹலோ மிஸ்டர் )

கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என்னாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

(ஹலோ மிஸ்டர் )

மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரிகிலேன்
உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ

(ஹலோ மிஸ்டர் )

Iruvar - Hello Mister Edirkatchi

இருவர் - பூ கொடியின் புன்னகை அலை

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மலை முகிலின் முகிலின் நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை

(பூ கொடியின் )

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் அ அ அ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்

(பூ கொடியின் )

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை

(பூ கொடியின் )

Iruvar - Pookodiyin Punnagai

இருவர் - நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை

ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கள் ஆடியவள் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில்  நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கள் ஆடியவள் நீயா

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா


ஆண் : மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பெண்:பாண்டி நாடனை கண்ட என் மனம் பாசலே கொண்டத் என்ன
ஆண்: நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
நிலாவில்லை பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
(F) இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை
இடையில் மேகலை இர்ருகவில்லை

ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

பெண்: யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன
பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன
ஆண்: செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

ஆண்: அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவளும் நீயா

பெண்:ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..

Iruvar - Narumugaye

Followers