ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து கத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
காதலா காதலா உனைனான் விடமாட்டேன்
கைத்தலம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்
கண்கள் மீனாடை அழகு மீதாட விடவே விடமாட்டேன்
(ஹலோ மிஸ்டர் )
கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என்னாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்
(ஹலோ மிஸ்டர் )
மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரிகிலேன்
உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ
(ஹலோ மிஸ்டர் )
Iruvar - Hello Mister Edirkatchi