Pages

Search This Blog

Showing posts with label Chinna Thambi. Show all posts
Showing posts with label Chinna Thambi. Show all posts

Tuesday, November 5, 2013

சின்ன தம்பி - தூளியிலே ஆடவந்த

தூளியிலே  ஆடவந்த  வானத்து  மின்விளக்கே
ஆழியில்  கண்டெடுத்த  அற்புத  ஆணிமுத்தே
தொட்டில்  மேலே  முத்து  மாலை
சின்னப்  பூவா  விளையாட  சின்னத்  தம்பி  எசபாட

(தூளியிலே )

பாட்டெடுத்து  நான்  படிச்சா  காட்டருவி  கண்ணுறங்கும்
பட்டமரம்  பூமலரும்  பாறையிலும்  நீர்சுரக்கும்
ராகமென்ன  தாளமென்ன  அறிஞ்சா  நான்  படிச்சேன்
ஏழு  கட்ட  எட்டுக்  கட்ட  தெரிஞ்சா  நான்  படிச்சேன்
நான்  படிச்ச  ஞானமெல்லாம்   யார்  கொடுத்தா  சாமிதான்
ஏடெடுத்துப்  படிக்கவில்ல  சாட்சியிந்த  பூமி தான்
தொட்டில்  மேலே  முத்து  மாலை
சின்னப்  பூவா  விளையாட  சின்னத்  தம்பி  எசபாட

(தூளியிலே )

சொருபோடத்  தாயிருக்க  பட்டினியப்  பார்த்ததில்ல
தாயிருக்கும்  காரணத்தால்  கோயிலுக்குப்  போனதில்ல
தாயடிச்சு  வலிச்சதில்ல  இருந்தும்  நானழுதேன்
நானழுதா  தாங்கிடுமா  ஒடனே  தாயழுவா
ஆகமொத்தம்  தாய்  மனசு  போல்  நடக்கும்  பிள்ள  நான்
வாழுகிற  வாழ்க்கையிலே  தோல்விகளே  இல்லைதான்
தொட்டில்  மேலே  முத்து  மாலை
சின்னப்  பூவா  விளையாட  சின்னத்  தம்பி  எசபாட

Chinna Thambi - Thooliyile

சின்ன தம்பி - போவோமா ஊர்கோலம்

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே

(போவோமா)

எட்டுவித அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
முத்துமணி தெறிக்குது ரத்தினங்கள் ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போரேன் நிப்பாட்டு

(போவோமா)

chinna thambi - Povoma Oorgolam

சின்ன தம்பி - அரச்ச சந்தனம் மணக்கும்

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)

மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ

(அரச்ச)

chinna thambi - Arachcha Sandhanam

சின்ன தம்பி - நீ எங்கே என் அன்பே

நீ எங்கே... என் அன்பே ...
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

விடிகிற வரையினில் கதைகளைப்படித்ததை
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்குதே துடிக்குதே
கதையில்லை கனவில்லை உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே
பிழையில்லை வழியில்லை அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே
வாழும்பொது ஒன்றாக வாழவேண்டும் வா வா
விடியும்போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வா வா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

வீதி என்றும் வெட்டவெளி பொட்டல் என்றும் வெண்ணிலவு
பார்க்குமா பார்க்குமா
வீடு என்றும் மொட்டைச் சுடுகாடு என்றும் தென்றல் இங்கு
பார்க்குமா பார்க்குமா
எத்தன் என்றும் ஏழைப் பணக்காரன் என்றும் ஒடும் ரத்தம்
பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சைபோடும்
பக்தன் என்றும் உண்மை தெய்வம்
பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இன்று
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே

நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானிங்கே...

Chinna thambi - Nee enge en anbe

சின்ன தம்பி - குயில புடிச்சி கூண்டில்

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ....

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி ....

எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அது தான்
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி ....

Chinna thambi - Kuyila pudichu

சின்ன தம்பி - உச்சந்தல உச்சியில

உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு

கண்மாயி நெறஞ்சாலும் அதை பாடுவேன்
நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும்
அதை பாடுவேன்
புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன்
பச்ச பனி மேலே பனி தூங்கும்
அதை பாடுவேன்
செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா சிறு சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும் பாட்டு தமிழ் பாட்டு

தெம்மாங்கு கிளிகண்ணி தேன் சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனிப்பாட்டு எசப்பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி
சொன்ன எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி
தாயாலதான் வந்தேன் இங்கு பாட்டாலதான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே வல்லே சின்ன தம்பி
இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும் பாட்டு எந்தன் பாட்டு

Chinna thambi - Uchanthala uchiyila

Followers