போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா
குளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே
(போவோமா)
எட்டுவித அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
முத்துமணி தெறிக்குது ரத்தினங்கள் ஜொலிக்குது நடந்திடும் நடையிலே
உச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஒம் பாட்டு
பொறப்படப் போரேன் நிப்பாட்டு
(போவோமா)
chinna thambi - Povoma Oorgolam