Pages

Search This Blog

Showing posts with label Anbulla Rajinikanth. Show all posts
Showing posts with label Anbulla Rajinikanth. Show all posts

Tuesday, November 19, 2013

அன்புள்ள ரஜினிகாந்த் - கடவுள் உள்ளமே ஓர் கருணை

 பல்லவி :

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சரணம் -1

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாச பந்தமே...

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சரணம் -2

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்
உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உன்னும் உனவும் நேரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்....

பல்லவி :

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

Anbulla Rajinikanth - Kadavul Ullame

அன்புள்ள ரஜினிகாந்த் - தேன் பூவே பூவே வா

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில்
தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


உனை நினைத்தேன்...

இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன்...

Anbulla Rajinikanth - Then Poove

அன்புள்ள ரஜினிகாந்த் - முத்து மணி சுடரே வா

ரஜினி அங்கிள்............

முத்து மணி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

[முத்து மணி...]

ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்...
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே...
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே...
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்...

ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே...
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...

[முத்து மணி...]

Anbulla Rajinikanth - Muthumani Chudare Vaa

Followers