Pages

Search This Blog

Showing posts with label Keladi Kanmani. Show all posts
Showing posts with label Keladi Kanmani. Show all posts

Tuesday, October 30, 2018

கேளடி கண்மணி - தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான்  காதல் சந்தம்
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட

காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்
பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில்  பாய்ந்திடும் என் எண்ணங்கள்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)

பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது
பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது
நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும்
தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும்
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை
கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)



Keladi Kanmani - Thenral Thaan 

Tuesday, October 29, 2013

கேளடி கண்மணி - மண்ணில் இந்தக்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த )

வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த )

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும்  அவளல்லவா

(மண்ணில் இந்த )

Keladi Kanmani - Mannil Indha

கேளடி கண்மணி - கற்பூர பொம்மை

கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ...

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ....



Keladi Kanmani - Karpoora Bommai

கேளடி கண்மணி - நீ பாதி நான்

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்
வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த
பருவ பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு
அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி
தெளிக்கும் முன்னாலே
மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்
கலங்கி விடுமே
இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்
டொடர்ந்துவருவென்
சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வ
சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

Keladi Kanmani - Nee Pathi Naan Pathi

Followers