Pages

Search This Blog

Showing posts with label Neeya. Show all posts
Showing posts with label Neeya. Show all posts

Friday, December 21, 2018

நீயா - உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்

தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு

ஆடை களைந்து ஆசை கலந்து
ஆடை களைந்து ஆசை கலந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன
இன்னும் சொல்வேனோ

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ
நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ

பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை



Neeya - Unnai Ethanai

நீயா - ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே (இசை)

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்

இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே

என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன

நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க

உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்

அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
தேர் கொண்டு வா....
கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

இந்த மழைமேகம் உன்மீது ஆடும்

அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்

இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்

புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....



Neeya - Ore Jeevan

நீயா - நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்

நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்

அது புரியாததா நான் அறியாததா
அது புரி....யாததா நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க

ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா



Neeya - Naan Kattil Mele

Followers