Pages

Search This Blog

Showing posts with label Thenmerku Paruvakaatru. Show all posts
Showing posts with label Thenmerku Paruvakaatru. Show all posts

Thursday, November 29, 2018

தென்மேற்குப் பருவக்காற்று - ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஓ…அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ
அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ
முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக
முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக
கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மறுநாளு மாறிவிடும்
நான் பொம்பள கிறுக்குல வல்லன்
என் புத்தியில் வேறொண்ணும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல
நீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டுல

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஆண்டிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்
ஆக மொத்தம் ஒன்னக்கண்டு ஆடிப்போச்சு நெஞ்சம்
பித்தம் கொஞ்சம் கூடிப்போனா இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவையி கொஞ்சம்
கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்
நீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு
எம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல பல்லு
நான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி



Thenmerku Paruvakaatru - Yedi Kallachi Enna Theriyalaiya

Followers