Pages

Search This Blog

Showing posts with label Vaazhve Maayam. Show all posts
Showing posts with label Vaazhve Maayam. Show all posts

Friday, November 30, 2018

வாழ்வே மாயம் - தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி
கிடைத்திட வரம் கொடம்மா (2)

கையில் மணியை தினமும் பிடித்தே 
ஆட்டும் பக்தன் அம்மா
சூடம் ஏத்தி மேலும் கீழும்
காட்டும் பித்தன் அம்மா

தேவி ஸ்ரீ தேவி ....

மாலை மரியாதை மணியோசை எதற்கு
தேவி அவதாரம் நான் தானா உனக்கு
போலி பூசாரியே ..
பட்ட போடாத பூசாரி நான் 
பண்ண கூடாதோ பூஜைகள் தான் 
அம்மன் உன் மேனி ஆணி பொன் மேனி
அன்பன் தொட வேண்டுமே
எடத்த கொடுத்தா மடத்த புடிப்பே
எனக்கா தெரியாது ஹே ஹே ஹே
வரத்த கொடுத்த சிவனே தவிச்சான் 
எனக்கா தெரியாது 

தேவி ஸ்ரீ தேவி ....

பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார சக்தி
ஆசை அடங்காதையா
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி
எனக்கு நீ தான் அம்மா
செக்கு மாடு சுத்தி வரலாம் 
ஊர் போய் சேராது
ததரினா தனா தனா
இந்த மோகம் ஒரு தலை ராகம் 
மயக்கம் தீராது 

தேவி ஸ்ரீ தேவி ....



Vazhve Maayam - Devi Sridevi Un Thiruvaai

வாழ்வே மாயம் - வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!
வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

தரை மீது காணும்
யாவும், தண்ணீரில்
போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது?
நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

யாரார்க்கு என்ன வேஷமோ?
இங்கே
யாரார்க்கு எந்த
மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம்
வரும்,
ஆட்டம் நின்றால்
ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

பிறந்தாலும் பாலை
ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை
ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

நாடகம் விடும்
நேரம்தான் உச்சக்
காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும்
ஒய்வு எடுக்கவும் வேலை
நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த
பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை,
தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும்
நேரமம்மா!



Vazhvey Maayam - Vazhve Maayam Intha Vazhve

வாழ்வே மாயம் - நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான்
மேகதூதமே
தேவிதாசன் பாடுவான்
காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல்
நானில்லையே ஊடல் ஏன்
கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும்
நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே
வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே
நான்தான்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா



Vaazhve maayam - Neela Vaana Odayil

வாழ்வே மாயம் - மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது (2)

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது

சரணம் - 1

மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம் (2)
விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலைமுதல் கால்வரை சிலிர்த்திடத்தான்
பூவை நானும் பூவல்ல பூப்போல நீ கிள்ள
எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

சரணம் - 2

ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய (2)
கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்
காமன் பாடும் சங்கீதம் காலத்தின் சந்தோஷம்
தொடத் தொடத் தொடர்ந்தது
கொடியெனப் படர்ந்தது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது
ஆ...ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது



Vaazhve maayam - Mazhai kaala megam Ondru

Followers