Pages

Search This Blog

Friday, November 30, 2018

வாழ்வே மாயம் - வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!
வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

தரை மீது காணும்
யாவும், தண்ணீரில்
போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது?
நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

யாரார்க்கு என்ன வேஷமோ?
இங்கே
யாரார்க்கு எந்த
மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம்
வரும்,
ஆட்டம் நின்றால்
ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

பிறந்தாலும் பாலை
ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை
ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

நாடகம் விடும்
நேரம்தான் உச்சக்
காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும்
ஒய்வு எடுக்கவும் வேலை
நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த
பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை,
தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும்
நேரமம்மா!



Vazhvey Maayam - Vazhve Maayam Intha Vazhve

Followers