Pages

Search This Blog

Showing posts with label Thithikudhe. Show all posts
Showing posts with label Thithikudhe. Show all posts

Thursday, December 5, 2013

தித்திக்குதே - ஒரு நிமிடமா ஒரு நிமிடமா

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா ஒருநிமிடமா தவறிவிட்டேன்
ஒருஜென்மமே ஒரு ஜென்மமே ஒருஜென்மமே இழந்துவிட்டேன்
அன்பே அன்பே எங்கே

பள்ளித்தோழியே நீ வந்து போனாயா
பாவாடைப்பூவே நீ வந்து போனாயா
காற்றேல்லாம் உன்வாசம் வந்து போனாயா
கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா
நதியெல்லாம் உன் கொழுசு வந்து போனாயா

(ஒரு நிமிடமா)

நிலா வந்து போனதற்கு வான்வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் பூமியிலே அல்லியெல்லாம் சாட்சிசொல்லும்
நீ வந்து போனதற்கு சாட்சி சொல்ல யாருமில்லை
ஆனாலும் மலையெல்லாம் அசையாமல் சாட்சி சொல்லும்
இளம்பிறையாகப்பார்த்தவளே இப்போதெப்படி இருப்பாயோ
அங்கம் கொழித்து திமிறும் அழகில் அடையாளங்கள் தொலைத்தாயோ
உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும்
உறைந்துவிடாமல் இருப்பாயோ                                  

(அன்பே அன்பே எங்கே)

பூப்போல மலர்ந்துவிட்டேன் வாழ்வில் ஏதும் மாசமில்லை
கண்ணா உன்னை கண்டுகொண்டால் கண்கள்மீண்டு தேவையில்லை
மறுமுறை என்னைப் பார்க்கையிலே மார்பில் புதைந்து அழுவயோ
வெட்கம்தடவிய புன்னகையாலே விவகாரங்கள் செய்வாயோ
இலையில் சிக்கிய மழையைப்போலே
என்னைத்தொடாமல் எங்கேதவிப்பாயோ

(அன்பே அன்பே எங்கே)

Thithikudhe - Oru Nimidamaa

தித்திக்குதே - சில்லென்ற தீப்பொறி

சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவெந
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?

இதோ உன் காதலன் என்று விறு விறு விருவென கல கல களவென
அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா

உன் மெத்தையில் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதெ
தித்திக்குதே ... தித்திக்குதே ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...தித்திக்குதே ... தித்திக்குதே ... நா நா நா நா நா நா


கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும்
கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும்
உயிர் ஊர நான் தேன் பாய் வதும்
உயிரோடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைக்கும் கொப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...


அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவொடு நான் எரிவதும் பகலொடு நான் உறைவதும்

நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலருவதும் நோய் கொண்டு நான் அழுவதும்

ஆக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...
தித்திக்குதே ... தித்திக்குதே ... தித்திக்குதே ... தித்திக்குதே ... நா நா நா நா நா நா

Thithikudhe - Silendra Theepori Ondru

Followers