Pages

Search This Blog

Tuesday, January 23, 2018

கடம்பன் - ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல்

ஏ சாமக் கோடாங்கி உடுக்க போல் என்ன      
பொழுதும் உலுக்குறியே     
இந்த சீம முச்சூடும் நெறைஞ்சி நின்னாலும்     
சிரிச்சே நீ என்ன கொல்லுறியே     
     
சாம கோடாங்கி உடுக்கபோல் என்ன     
பொழுதும் உலுக்குறியே     
இந்த சீம முச்சூடும் கரைஞ்சி நின்னாலும்     
சிரிச்சே நீ என்ன கொல்லுறியே     
     
ஏ முத்துனவ ரத்தினமே முந்தி அணிஞ்சி     
நீ வந்து நிக்க போகுது என் கண்ணு அவிஞ்சி     
     
பணமே இல்லாத கரும்பா உன் பேச்சி     
மனச தித்திப்பா மாத்திடுச்சி     
     
கோடி ரூபாய கொடையா தந்தாலும்     
ஒதுக்கி வைப்போமுங்க     
எட்டு மாடி வீடெல்லாம்      
எதுக்கு வேணாங்க     
ஓல கொட்டாயே போதுமுங்க     
     
காடு பூராவும் ஒதவும் சொந்தந்தான்     
கலங்கமாட்டோமுங்க     
வேற ஆளே உள்ளார துணிஞ்சி வந்தாலே     
உசுர தந்தாச்சும் காப்போமுங்க     
     
ஏ கட்டையில போரதுதான் இந்த உசுரு     
இத எதையும் தன்னுள்ள மறைச்சி வைக்காத      
காடா வாழ்வோமே நாங்க நாங்க     
     
ஆசப்பாட்டாலும் எதையும் கேட்காம எடுக்கக்கூடாதுங்க     
வெளி வேசம் போடாம நெசமா வாழ்ந்தாலே     
எதுவும் தன்னால கைகூடுங்க     
     
வேரே இல்லாம மரமும் வாழாது      
வெவரம் சொல்வோமுங்க     
வெந்த சோறே ஆனாலும் ஒழைச்சி திங்காட்டி     
ஒடம்பில் ஒட்டாது கேட்டுக்குங்க     
     
ஏ உத்தமனா வாழும்வரை இல்ல கவல     
நீ ஒன்னனதான் நம்பும்வர உண்டு ரகல     
     
வழியும் மாறாம நடந்தா தப்பில்ல     
நிமிர்ந்து வாழ்வோமே ஊரே சொல்ல



Kadamban - Saama Kodaangi

Followers