Pages

Search This Blog

Tuesday, January 22, 2019

தர்மதுரை (2016) - எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று

எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று     
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு     
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு     
சிறு கரப்பான் பூச்சி வாழ்வதுண்டு     
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்     
என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்     
உன் சோகம் ஒரு மேகம்     
நான் சொன்னால் அது போதும்     
உன் கண்ணில் ஏந்தும் கண்ணம் தான் ஆகும்      (எந்த)
     
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது     
எப்போதுமே பகலாய் போனால்     
வெப்பம் தாங்காதே     
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் கதைதான்      
உன் உயிரை சலவை செய்ய     
ஒரு காதல் நதி உண்டு     
உன் சுவாசப்பையை மாற்று     
அதில் சுத்தக்காற்றை ஏற்று     
நீ இன்னோர் உயிரில்      
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ…     
     
ஹோ…… ஹோ…… ஹோ……     
     
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது     
சல்லலையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது     
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்     
நம் உறவின் பெயரேத்தெரியாதம்மா     
உயிரைத் தருகின்றாய்      
உன் உச்சந்தலையை தீண்ட     
ஓர் உரிமை உண்டா பெண்ணே     
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…     
ஓ……… ஓ………… ஹோ………      (எந்த)



Dharma Durai (2016) - Endha Pakkam

Followers