கண்களா ஹ்ம்ம் ....
மின்னலா ஹ்ம்ம் ....
கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா - வெண்ணிலா
ஒஹ் ...என்னோடுதான் நான் இல்லையே
கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோ ...
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா
ரோஜாபூ தேகத்தில் தாழம்பூ வாசங்கள்
நான் இங்கு கண்டேனடி
செவ்வாயின் ஓரத்தின் சூடான தேனுக்கு
நான் ஏங்கி நின்றேனடி
தொட்டாலும் தாளாமல் விட்டாலும் போகாமல்
தள்ளாடும் நெஞ்சம் இனி
முத்தங்கள் எல்லாமும் முத்துக்கள் என்றாக
நான் கோர்ப்பேன் முத்து மணி
உன்னை தாயாக்கி தாலாட்டுவேன் - கண்மணி
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா - வெண்ணிலா
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
ஆனந்த வெள்ளத்தில் நான் மூழ்கும் நேரத்தில்
மூச்சுக்கு திண்டாடினேன்
வீழ்கின்ற நேரத்தில் தீ பற்றி கொள்கின்ற
விண்மீனைப் போல் ஆகினேன்
காமன்தன் தேசத்தில் என்னென்ன இன்பங்கள்
எல்லாமும் நான் வாங்கினேன்
எல்லாமும் தந்தாலும் இல்லாத நெஞ்சம் போல்
நாள் தோறும் நான் ஏங்கினேன்
இது எப்போதும் தீராத தாகம் - காதலா
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா
மௌனமே பாடலா ஆனதே காதலா
இந்த சந்தோஷம் நீ தந்ததாலா - வெண்ணிலா
ஒஹ் ...என்னோடுதான் நான் இல்லையே
கண்ணோடு தான் துயில் இல்லையே ஹோய் ...
கண்களா மின்னலா கூந்தலா ஊஞ்சலா
இந்த சந்தேகம் நீ வந்ததாலா - காதலா , வெண்ணிலா
Endrendrum Kaadhal - kangala minnala