தாமரை கண்ணங்கள்...
தேன்மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்...
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்...
கொத்து மலர்க்குழல் பாதமலந்திடும் சித்திரமோ...
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ...(கொத்து)
துயில் கொண்ட வேளையிலே...
குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது...சொல்லவோ இன்பங்கள் (மாலையில்)
ஆளில்லை மேலொரு கண்ணனைப் போலவன் வந்தவனோ...
நூலிடை மேலொரு நாடகமாடிட நின்றவனோ...
சுமை கொண்ட பூங்கொடியின்
சுவை கொண்ட தேன்கனியை
உடை கொண்டு மூடும்போது...உறங்குமோ உன்னழகு...(தாமரை)
Ethir Neechal - Thamarai Kannangal