Pages

Search This Blog

Friday, December 20, 2013

அண்ணாமலை - ஒரு பெண் புறா

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

***

கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லேயே அது இந்த காலமே
என் தேவனே ஓஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

***

கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண் பிள்ளையோ சாகும் வரை
பெண் பிள்ளையோ போகும் வரை
விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

Annamalai - Oru Pen Pura

Followers