Pages

Search This Blog

Wednesday, November 16, 2016

தாரை தப்பட்டை - இடரினும் எனதுறு

இடரினும் எனதுறு நோய் தொடரினும்
நின் கழல் தொழுது எழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும்
நின் கழல் விழுவேன் நல்லேன்
தாளிலம் தடம் புனல் தயங்கு சென்னி
போலில மதி வைத்த புண்ணியனே
போலில மதி வைத்த புண்ணியனே
 
என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா

நீ வந்தது எங்கோ நானும் வந்தது எங்கோ
நம்மை இங்கு ஒன்றாய் சேர்த்ததே இசையே
எந்தன் முன்பு உன்னை வைத்ததே

பிறந்தது சிற்றூரில்
வாழ்வது ஓலை குடிலில்
இருக்கும் இவை வந்து என்னை என்ன செய்யும்
மேகமற்ற வான் போல
தெளிந்த தண்ணீர் போல
ஊற்றெடுக்கும் இசை அமுதம் எந்தன் மீது ஓடும்
நீ விரும்பும் நேரம் உனக்கிது வேண்டும்
உன் கவனம் யாவும் பொழுது போக தீரும்
சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும்
வாழ்வென்ன இசை என்ன எனக்கு ஒன்றாகும்

என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா

ஊர்கள் கூடும் திருநாளை
தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இசை தெய்வம் கலைவாணி எனக்கருளும் போதும்
ஊர் தெய்வம் பேசாது
சாட்சி போல பார்க்கும்
நிறைந்த எந்தன் நெஞ்சம்
திறந்திருக்கும் வானம்
குறைகள் தன்னை தள்ளி
உண்மை கொண்டு வாழும்
எனக்கென்று எது உண்டு
இங்கு இந்த மண்ணில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
வேறு என்ன வேண்டும்

என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா

Tharai Thappattai - Idarinum

Followers