நதியென நான் ஓடோடி
கடலில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சு காற்று போன பின்பு
நான் வாழ்வதோ
தீராத காயம்
மனதில் உன்னலடி ஆராதடி
வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
ஏனோ இன்று தூரம் போனாள்
இடப்பக்கம் துடித்திடும்
இருதய இசையென
இருந்தவள் அவள் எங்கு போனாலோ
இரு விழி இமை சேராமல்
உறங்கிட மடி கேட்கிறேன்
மழையினை கண் காணாமல்
மேகம் பார்த்து பூமி கேட்க
நான் பாடினேன்
நீயில்லை நானோ
நிழலை தேடும் நிஜம்
ஆனெனடி..
வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
எங்கும் பார்த்தேன் உந்தன் பிம்பம்
கனவிலும் நினைவிலும்
தினம் தினம் வருபவள்
எதிரினில் இனி வர நேராதோ
நதியென நான் ஓடோடி
கடலில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
தூண்டில் முள்ளில் மாட்டி கொண்ட
மீன் நானடி
ஏமாற்றம் காலம்
இனிமேல் வேண்டாம்டி
கை சேரடி..
வானம் பார்த்தேன் பழகிய
விண்மீன் எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
Kabali - Vaanam Paarthen