Pages

Search This Blog

Wednesday, November 16, 2016

கபாலி - மாய நதி

நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே


 
ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்

ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளா நீ
வலி தீர்க்கும் வழியா
வாஞ்சை தரவா

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

யானை பலம் இங்கே
சீரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே

தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் எனும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்

மணலூரும் மழையாய்
மடிமீது விழ வா வா
அணை மீறும் புனலாய்
மார் சாய்ந்து அழவா

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே

யானை பலம் இங்கே
சீரும் உறவில்
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே

Kabali - Maya Nadhi

Followers