Pages

Search This Blog

Wednesday, July 8, 2015

புறம்போக்கு - கலாச்சி கலாச்சி

ஆயா ஆயா ஆயா ஆயா
ஆயா ஆயா ஆயா ஆயா

சந்து முனையில
ஆலுவள்ளி கிழங்கு விக்கிற ஆயா

நான் சந்தோஷமா அவுத்து வுடும்
பாட்டுக்காட வரியா

சந்து முனையில
ஆலுவள்ளி கிழங்கு விக்கிற ஆயா

நான் சந்தோஷமா அவுத்து வுடும்
பாட்டுக்காட வரியா

ஆட்டி ஆட்டி குடிக்கிறியே நாயர் கட சாயா
அதுல அப்பீட்டாயி மெதப்பதென்ன

நாஸ்டா கட ஈயா நாஸ்டா கட ஈயா
சக்கர பக்கர சாலு பக்கர சோயா

எங்க சக்கரம் சுத்துது பிரேக் இல்லாம போயா
தின்சு தின்சா மன்சுக்குள்ள பலூன் பறக்குது

ரொம்ப பெர்சு பெர்சா ஆச வந்து சல்யூட் அடிக்குது
பொண்ணு சிரிக்குது கண்ணு துடிக்குது
கன்னு வெடிக்குது

சந்து முனையில
ஆலுவள்ளி கிழங்கு விக்கிற ஆயா

நான் சந்தோஷமா அவுத்து வுடும்
பாட்டுக்காட வரியா

கலாசி கலாசி ரயிலு வேல கலாசி
ஒராசி ஒராசி ஆடப் போறேன் கலாசி

கலாசி கலாசி ரயிலு வேல கலாசி
ஒராசி ஒராசி ஆடப் போறேன் கலாசி

அய்யோ பொண்ணு நீயும் இந்த
ஆயாவுக்கு பேத்தியா

கொய கொயன்னு பாக்குறியே
கொய்யா தோப்பு பார்டியா

கிட்ட வந்து கொஞ்ச நீயும்
கொஞ்ச கிஞ்ச மாட்டியா

தாங்க முடியல நைட்டு தூங்க முடியல
அந்த கவலைய நான் மறக்கத் தானே
டெய்லி குடிக்கிறேன்

டைட்டா சாப்டே லைட்டா குட்றா
எனக்கும் ஒன்னப் போல
ஏகப் பட்ட பிரச்சன தான் மச்சனா

அத சாக்கு வெச்சி உன்னப் போல
மூக்கு முட்ட குடிச்சேனா

பாக்கு போட்டேனா டம்மு வலிச்சேனா
ஒரு பொம்பள நான் ஒண்டியாளா
வாழ்க்கையத் தான் பேலன்ஸ் பண்லியா
இன்னா சர்தானே

ஆயாவுக்கேத்த பேத்தி நீ தான்

காலி டப்பா வாழ்க்க யாரும் இல்ல கேக்க
தண்ணியடிச்சா கக்குவேன் நான் தத்துவம்

தானா வரும் மரணமா தப்பா அது வரணுமா
மனுசனுக்கே மனுசன் அத தரணுமா

கீதையில கண்ணன் சொன்ன ஃபீலு
ஃபுல் போதையில அண்ணன் சொல்றேன் கேளு

வாழ்க்க யாரு நடத்தும் பொம்மலாட்டம் டா
சொல்லு

துப்புக் கெட்டு தான் நீ ஆடுற
துட்டு கேட்டு நான் ஆடுறேன்

அட இன்னிக்கி ஆறு மணிக்கி மேல போனா
தமிழ்நாடே ஆடுது

ஒழச்சி களச்ச கூட்டம் ஒயினு ஷாப்ப
தேடித் தானே ஓடுது

குடும்பம் அழியுது ஆனா அரசு நடக்குது
அந்த கருமத்த நான் அடிச்சு தான் டா
கொடலு ஃபுல்லா வெந்து போகுது

நாட்ட காக்க உயிர குட்ரா

சந்து முனையில
ஆலுவள்ளி கிழங்கு விக்கிற ஆயா

நான் சந்தோஷமா அவுத்து வுடும்
பாட்டுக்காட வரியா

ஆட்டி ஆட்டி குடிக்கிறியே நாயர் கட சாயா
அதுல அப்பீட்டாயி மெதப்பதென்ன

நாஸ்டா கட ஈயா நாஸ்டா கட ஈயா
சக்கர பக்கர சாலு பக்கர சோயா

எங்க சக்கரம் சுத்துது பிரேக் இல்லாம போயா
தின்சு தின்சா மன்சுக்குள்ள பலூன் பறக்குது

ரொம்ப பெர்சு பெர்சா ஆச வந்து சல்யூட் அடிக்குது
பொண்ணு சிரிக்குது கண்ணு துடிக்குது
கன்னு வெடிக்குது

கலாசி கலாசி ரயிலு வேல கலாசி
ஒராசி ஒராசி ஆடப் போறேன் கலாசி

கலாசி கலாசி ரயிலு வேல கலாசி
ஒராசி ஒராசி ஆடப் போறேன் கலாசி

Purampokku - Kalaasi Kalaasi

புறம்போக்கு - மரினா பீசுல

மெரினா பீச்சுல நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல கவுந்துட்ட மாப்புள

படவா ரஸ்கலு இதுவா மேட்டரு
ஜெயிலு டார்ச்சரு புரியல ஃப்யூச்சரு

மரினா பீசுல பறவையாக பிறந்து விட்டால்
சிறைகள் இல்ல டா

பறந்து போக நமக்கு ரெண்டு
சிறகு இல்ல டா

சும்மா வந்ததில்ல ஜெயிலு நம்ம கட்டியது
நம்ம கட்டியதே நமக்கு லாடம் கட்டியது

மரினா பீசுல மெரினா பீச்சுல நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல கவுந்துட்ட மாப்புள

துண்டு பீடிக்காக இங்கே
யுத்தம் கூட வெடிக்கு
போலீஸ் லத்தி சார்ஜ் அடக்கும்

மரினா பீசுல போட்டுத் தள்ளும் என்கவுன்டரு
காட்சி கூட நடக்கும்

அட சாட்சி ஏது நமக்கும்
அரசியலும் கிரிமினலும் கலக்கும்

சிறைக் கூடம்
அதுல கலங்குதடா நாடும்

மரினா பீசுல உலகம் உருண்டை என்றவனையே
உள்ள தூக்கிப் போட்டான்
அதுக்கு இப்போ மன்னிப்பு கேட்டான்

இருவர் பெரிய பெரிய புத்தகமெல்லாம்
பிறந்த இடமடா

இது அரிய பெரிய தத்துவமெல்லாம்
வெளஞ்ச நிலமடா

மரினா பீசுல மெரினா பீச்சுல நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல கவுந்துட்ட மாப்புள

படவா ரஸ்கலு இதுவா மேட்டரு
ஜெயிலு டார்ச்சரு புரியல ஃப்யூச்சரு

சந்தேகத்துல கழுத்த நெரிச்சு
கொன்னுபுட்டானே பாவி
இவன் மனைவி நெரபராதி

மரினா பீசுல எந்த தப்பும் செய்யாத இவன்
ஆயுள் தண்டன கேஸு

இங்க ஆயிட்டானே லூஸு

நம்மள ஒண்ணா சேத்து வெச்சது
இந்திய பீனல் கோடு

அதை எழுதி வெச்சவன் யாரு
அவன் இங்கிலாந்து ஆளு

மரினா பீசுல அந்த மெக்காலுக்கு வக்காலத்து
வாங்கித் தந்த நாடு

நம்ம மெக்காலே ரொம்ப சூடு

உள்ளே இருந்து கவலப் பட்டோம்
எல்லாமே பாத்து

அட வெளி உலகம் சிந்திக்க வேணும்
நம்ம நெலமைய சேத்து

மரினா பீசுல மெரினா பீச்சுல நடந்தா காத்துல
கலந்தா மூச்சுல கவுந்துட்ட மாப்புள

படவா ரஸ்கலு இதுவா மேட்டரு
ஜெயிலு டார்ச்சரு புரியல ஃப்யூச்சரு

மரினா பீசுல பறவையாக பிறந்து விட்டால்
சிறைகள் இல்ல டா

பறந்து போக நமக்கு ரெண்டு
சிறகு இல்ல டா

சும்மா வந்ததில்ல ஜெயிலு நம்ம கட்டியது
நம்ம கட்டியதே நமக்கு லாடம் கட்டியது

Purampokku - Marina Beachula

புறம்போக்கு - ஒரே ஒரு முறை பார்த்திடு

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்

முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்

முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

நதியில் விழுந்து
தள்ளாடும் இலைகள் ஆவோம்

நதியின் போக்கில்
அன்பே வா மிதந்து போவோம்

நீ என்னை புதிதாய் பார்ப்பதும்
நான் உன்னை மெதுவாய் ஈர்ப்பதும்

நம் கைகள் ஒன்றாய் கோர்ப்பதும்
நம் நெஞ்சம் எங்கோ மிதப்பதும்

என்றோ எங்கோ யாரோ எழுதிய
காதல் காவியம்

ஏனோ நானும் தூங்கும் போதும்
உந்தன் ஞாபகம்

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன

புதிய உலகில்
கை கோர்த்து கூட்டிப் போனாய்

இதயக் கதவில்
கை ரேகை வைத்துப் போனாய்

ஓ பெண்ணே உன் நெருக்கம் பிடிக்குதே
உன் சுவாசம் என்னை எரிக்குதே

உன்னாலே கால்கள் பறக்குதே
வெண் மேகம் தலையில் இடிக்குதே

எது வரை போகும் அது வரை இந்த
பாதை நீளட்டுமே

எதிரினில் உந்தன் குரலினை கேட்கும்
போதை தொடரட்டுமே

பெண்ணே நீ இன்பம் என்பதா
பொல்லாத துன்பம் என்பதா

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு

வேறென்ன வேண்டும் வேண்டும்
முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

Purampokku - Orae Oru Murai

பாகுபாலி - தீரனே

ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நான் செந்தேனா?
ஹோனன ஹோனன ஹோனன
ஹோ நீ வண்டுதானா?

அந்தரத்தில் ஒரு 
வெண்மதியாய் உன்னை அழைத்தேனா?
இந்திரலோகத்துச் 
சுந்தரி உனக்கே உனக்காய் முளைத்தேனா?

வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!

மயக்கமா? அசதியா? 
உன் விழித் தூக்கம் நான் ஆகவா?
உனை வழி நடத்தியே 
இணை என்று மாறட்டுமா?

தடைகளை தகர்த்திந்த
மலைகளை நகர்த்திடப் பார்க்கின்றேன் 
உனைக் காண...
விழும் இந்த அருவியை
சடையனின் சடையென நான் இங்கே எதிர்க்கின்றேன்
உன் பூமுகம் அதைக் காணவே
இப்பூமி ரெண்டாக நான் பிளக்கின்றேன்!

வீரனே! உலகம் உந்தன் கீழே
தீரனே! நீ நினைத்தாலே!

உயரமாய் முளைத்து வா
நீ வரும் அந்த வரம் கேட்கிறேன்!
சிறகுகள் முளைத்து வா 
வழி மீது விழி வைக்கிறேன்!

முயலும் உந்தன் மனதின் முன்னே
புயலும் வந்து கைகள் கட்டும்
இயலும் என இதயம் கர்ஜிக்கும்
அதை எட்டுத் திக்கும்!

மலைகள் உந்தன் தோளைக் கண்டு தான்
பொறாமை கொள்ளுதே!

அருவி உந்தன் வேகத்தை
விழி விரித்துப் பார்க்கின்றதே!

இமைத்திடா உன் 
விழிகளில் தீ
கடந்து போ நீ
மலைகள் தாவி

வீரனே 
ஊரனே 
உலகம் உந்தன் கீழே 
எனது தேகம் இங்கே! 
தீரனே 
மாரனே 
நீ நினைத்தாலே! 
உன் விரல் எங்கே? 

Baahubal - Theerane

பாகுபாலி - மனோகரி மனோகரி

உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்

பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்

மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....

கள்ளன் நானோ உன்னை அள்ள 
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!

ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...


நீல வானை ஊற்றி 
கண்கள் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ? 
வேறே... என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை அது போலே தான்
அவன் என் கால்கள் செய்தானோ!

வழுக்கிட வா!
மனோகரி.... மனோகரி... 
மனோகரி... மனோகரி....

பூவை விட்டு பூவில் தாவி 
தேனை உன்னும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

மேகத் துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
காந்தள் பூவைக் கிள்ளி
கைவிரல் செய்தானோ? 
வேறே... என் தேடல் வேறே!
ஆழி கண்ட வெண்சங்கில்
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!
யாளி இரண்டைப் பூட்டி
அவன் தனம் ரெண்டைச் செய்தானோ!

வழுக்கிட வா!
மனோகரி.... மனோகரி... 
மனோகரி... மனோகரி....

தேகம் எங்கும் தாகம் கொண்டு
நான் தவிக்கிறேனே
மோகம் மொண்டு நான் குடிக்கிறேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...

Baahubali - Manohari

பாகுபாலி - சிவா சிவாய போற்றியே

சிவா சிவாய போற்றியே! 
நமச்சிவாய போற்றியே!
பிறப்பறுக்கும் ஏகனே! 
பொறுத்தருள் அநேகனே!

பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்!
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்!

யாரு இவன்? யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே!
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே!

கண்ணு ரெண்டு போதல!
கையு காலு ஓடல!
கங்கையத்தான் தேடிகிட்டு 
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே!

எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
அலைமகள் உன் கைதியே

அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அர்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்

ஒளிர்விடும் எம் தேசனே
குளிர்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே

நில்லாமல் ஆடும் பந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் அந்தமே!

Baahubali - Siva Sivaya

பாகுபாலி - பச்சைத் தீ நீயடா

பச்சைத் தீ நீயடா!
கச்சுப் பூ நானடா!
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா!

வெற்றுக் கல் நானடா!
வெட்டும் உளி நீயடா!
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா

நீயே மண் மின்னும் வெண்தாரகை 
உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை
கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே!
புது வானங்கள் உருவாகுமே!

மான் விழிக்குள் எந்தன் 
வாழ்வொன்றைக் காண
மாமலை ஒன்றேறி வந்தேனடி!

இதயம் ஒன்று உள்ளதென்று
உன் அணைப்பாலே கண்டேனே!
இனும் எனை இறுக்கியே
அணைத்திடத் துடித்தேனே!

நீயே மண் மின்னும் வெண்தாரகை 
தோளில் வீழ்கின்ற பூங்காரிகை
உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்
என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்!


கீறலில் உண்டாகும் 
கீதங்கள் கேட்டாய்
மோதலின் மோகங்கள் கேட்டாயடி!

பிறவி பல எடுத்தாலும்
நிகழும் கணம் நான் மறவேனே
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே!

நீயே மண் மின்னும் வெண்தாரகை 
கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்

Baahubali - Pachai Thee

Followers