பச்சைத் தீ நீயடா!
கச்சுப் பூ நானடா!
ஒற்றைப் பார்வை கொண்டே
பற்றிக் கொண்டாயடா!
வெற்றுக் கல் நானடா!
வெட்டும் உளி நீயடா!
அற்பப் பாறை என்னில்
சிற்பம் செய்தாயடா
நீயே மண் மின்னும் வெண்தாரகை
உள்ளங்கை சேர்ந்தப் பூங்காரிகை
கைகள் நாம் கோர்க்கச் சிறகாகுமே!
புது வானங்கள் உருவாகுமே!
மான் விழிக்குள் எந்தன்
வாழ்வொன்றைக் காண
மாமலை ஒன்றேறி வந்தேனடி!
இதயம் ஒன்று உள்ளதென்று
உன் அணைப்பாலே கண்டேனே!
இனும் எனை இறுக்கியே
அணைத்திடத் துடித்தேனே!
நீயே மண் மின்னும் வெண்தாரகை
தோளில் வீழ்கின்ற பூங்காரிகை
உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்
என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்!
கீறலில் உண்டாகும்
கீதங்கள் கேட்டாய்
மோதலின் மோகங்கள் கேட்டாயடி!
பிறவி பல எடுத்தாலும்
நிகழும் கணம் நான் மறவேனே
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே!
நீயே மண் மின்னும் வெண்தாரகை
கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்
Baahubali - Pachai Thee