Pages

Search This Blog

Friday, December 30, 2016

ஜெயம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே மலருகின்றதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக

தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சும்
கொஞ்ச தங்கும் நெஞ்சே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

Jayamkondaan - Naan Varaindhu Vaitha

Followers