Pages

Search This Blog

Friday, December 30, 2016

தாமிரபரணி - திருச்செந்தூரு முருகா

குழு்:
கஞ்சுன மேல நெய்மேல எடையமேல நல்ல மேல
முல்லக்காடு கோவக்காடு பூச்சிக்காடு பொம்மாரிக்காடு
குறும்பூரு நல்லூரு ஆத்தூரு பனையூரு
வல்லநாடு மொராப்ப நாடு தெய்வ செயல் புதங்கோயிங்

ஆண்:
பொண்ணுங்கள தேடிபாத்தேன் வள்ளிய கண்டு பிடிச்சேன்
பத்தாயிரம் கலெக்டிங் கல கல கல கலெக்டிவ்
திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா
தெருத் தெருவா அலையவச்சா திருச்செந்தூரு முருகா
ஏ........ ஹேய்........... தேவதையா வந்தா தலவலியதந்தா
தேடித்தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா
காசுக்கு காயிரம் கடத்தெரு மேயிரம்
கண்டபடி பாயிரம் காணலயே
அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா (திரு)

லோக்கலு ஆளுமில்ல அவுட்டரில் பாத்ததில்ல
அவளினி மாட்டிக்கிட்டா கதகளிதான் (அவ)

திருச்செந்தூரு முருகா
வாகஷம் வந்தும் தர எறங்கும்
ப்ளைட்டில் கூட தேடிபாத்து புட்டோம்
காலையில தெனம் ஸ்டேஷன் வரும்
முத்துநகர் ட்ரெயின பொரட்டிப் புட்டோம்
பனிமாதா கோயிலு மணிய
கயிறே இல்லாம அடுச்சுப்புட்டா

குழு்:
அவ கீர வட நாம நாடார் கட
காசு கெடைக்கலையினா தேடி மூஞ்சிய ஒட
அவ சிக்கட்டும் சிக்குஎடுப்போம்
அவ நெட்டையா இல்ல குட்டையா
புளியங்கொட்டையா நாட்டுக்கட்டையா
அவ ஒத்தையா இல்ல ரெட்டையா
கிழிஞ்ச சட்டையா கழுத மூட்டையா

பெண்:
ஆ...... கணபதி சரணம் கணபதி சரணம்
கணேஷ சரணம் கணபதியே
ஐந்து கரத்தினை யானை முகத்தினை
அகிலம் முழுவதும் கணபதியே கணபதியே கணபதியே

ஆண்:
பிகருங்கெல்லாம் நம்ம அழுகவிட்டு
அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு
கிரைண்டருல போட்ட அரிசியைப் போல்
பசங்க வாழ்க்க வெந்து நொந்து நூலா ஆச்சு
பொண்ண பூவுனு சொன்னது நால
நாரு நாராக கிழிக்குதுடா
அவங்கள தெய்வமின்னும் சாமி ஆடுறhங்க
ஒடும் ஆறு என்னும் காலவாரு ராங்க
குத்து வெளங்குன்னும் குத்துராங்க
அவ கேடியா திருட்டு சி.டி.யா
ஏ.பி. சீடியா கொப்பன் தடியா
அவசிட்டியா பட்டி தொட்டியா
கொரங்கு புத்தியா குதிர லத்தியா (திரு)

Thaamirabharani - Thiruchendhuru Muruga

தாமிரபரணி - வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு

ஆண் :
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டபாக்குதே........
நான் திமிரா செஞ்ச காரியமொண்ணு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்
மனசு வெறுத்துப் போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கிப் போச்சே (வார்த்த)

உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது வெளங்கல
கலங்கர வெளக்கமே இருட்டிலே
பெத்ததுக்கு தண்டனையை கொடுத்துட்டேன்
அவன் ரத்தத்தில் துக்கத்த நான் தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய வெதச்சிட்டேன்

அட்டகத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு
வெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வெனையாச்சு
பட்டாம் பூச்சி மேலே ஒரு கொட்டங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ணே இப்ப காணலியே
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு
படச்சவன் போட்ட முடிச்சிது
என் கழுத்துல மாட்டி இருக்குது
பகையிலே மனசு தான் பதருது கனவுல பெய்யிர மழ இது
நான் கைதொடும் போது மறையுது
மேகமே சோகமா உறையுது
சுரைத் தேங்கா போல என்ன சுக்கு நுறா ஒடைக்காதே
சொக்கபன மேலே நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகையிலே 
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே பேயிக் காத்து வீசியதே (வார்த்த)

Thaamirabharani - Vaartha Onnu

தாமிரபரணி - கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காத ல் என் காதல் பூபூகுதுஅம்மா 
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா 
அவன் மீசை முடியை செஞ்சுக்குவேன் மோதிரமா 

சிவப்பாக இருக்காளே கோவை பழமா 
கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா 
அறுகம்புல்லு ஆட்டை இப்போ மீயுதம்மா 
பார்வையாலே ஆயுள்ரேகை தேயுதம்மா 
இவ காதல் இப்போ ஜோளியதான் காட்டுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 

(இசை )


வெள்ளிகிலமா 10.30 - 12 உன்னை பார்த்தேனே 
அந்த ராவுகல நேரம் எனக்கு நல்ல நேரமே 
தண்ணியால என்னக்கு ஒன்னும் கண்டமில்லையே 
ஒரு கன்னியால கண்டம் ஏன்னு தெரியவில்லையே 

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க 
நீச்சல் தெரியனும் 
காதல் கடலுக்குள்ள முத்து எடுக்க 
பாய்ச்சல் புரியனும் - அய்யா 

சிவப்பாக - ஆகா 
இருப்பாளே - ஆமா 
சிவப்பாக - அஹஹஹ 

சிவப்பாக இருக்காளே கோவை பழமா 
கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா 


(இசை )

ஒ உருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு 
அத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு 
ஹே வெட்டும்புலி தீப்பெட்டி போல் கண்ணு உன்னக்கு 
நீ பாக்கும் போது பத்திகிச்சு மனசு எனக்கு 

பூமியில எத்தனையோ பூவு இருக்கு 
உன் பூ பூட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு - எம்மா , ஆத்தா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா 
இவ காதல் இப்போ யோளியதான் காட்டுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 
பூகுதம்மா ....தனனானன ...தனனானன

Thaamirabharani - Karuppaana Kaiyale

தாமிரபரணி - தாலியே தேவ இல்ல

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே

அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ளெ
அட கிருக்கி
நீதான் என் உசுருக்குள்ளெ
உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊருக்குள்ளெ
என்ன உருக்கி

தாலியே தேவ இல்ல
நான் தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரி பாதி
ஆஹ் ஆஹ்…

ஆஹ் ஆஹ்…

பத்து பவுனு பொன் எடுத்து
கங்கு குள்ள காய வெச்சு
தாலி ஒன்னு செய்ய போறேன்
மானே மானே
நட்ட நடு நெத்தியிலெ
ரத்த நெர பொட்டுவெச்சு
உன் கை புடிச்சு ஊருக்குள்ளெ
போவேன் நானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
மனசுல மனசுல மயக்கம்
இது என்ன
இது என்ன
கனவுல கனவுல கொழப்பம்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான்
அட கிருக்க
நான் உனக்காக பொறந்தவடா
அட கிருக்க
நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு
ஆஹ் ஒஹ்..
ஆஹ் ஒஹ்..

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
ஆஹ் ஆஹ்…

எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டி புடிச்சு கடிக்கபோறேன்
நானே நானே
ஹே குற்றவியல் நீதிமன்ற
கூண்டுகுள்ளெ நிக்கவெச்சு
கேசு ஒன்னு போட்டுருவேன்
மானே மானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்கிது உன்ன
இது என்ன
இது என்ன
நான் எத்தன தடவ சொன்னேன்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான் ஹோ..
அடி சிருக்கி
நீ தாய் மாமன் சீதனமே
உன்ன நெனச்சு
நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி
ஒஹ் ஹோ…

தாலியே தேவ இல்ல
நாந்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

Thaamirabharani - Thaaliyae Thevaiyillai

வருஷம் 16 - பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விலங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திலைத்திட
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

Varusham 16 - Pazhamuthir Cholai

வசூல் ராஜா M.B.B.S - சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புகுள்ளே உடுக்கடிசா
பிடிச்ச பேய் ஓடி போகும்
வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுகொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வென்னிலாவும்
இருந்த இளமைக்கு யோகம்
உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லயென்றால் தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்
என்னுடய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு
வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளை தொல்லை பாத்துபுட்ட
கடத்த துடிக்குதடா காலு
மங்கில இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலயே வாலு
ஓடும் தண்ணியில பாசியில்லையே
உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லயே
வாழ்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

Vasool Raja MBBS - Siruchi Seena Thana

வேதம் புதிது - கண்ணுக்குள் நூறு நிலவா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(சம்பசாம்பவி சந்ரமௌளிதகலா
வர்ண உமா பார்வதி
காளி பைபவத்தீ ஷிவற்றி நயன
காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயுவன சுபகாரி
சாம்ராஜ்ய லட்ஷ்மிப்ரதா…)

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா

வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(பூவே…பெண் பூவே…
இதில் என்ன அதிசயம், இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம், இவன் மனம் புரியலயா ? )
ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்

உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது

ரெண்டா ? ஏது ? ஒன்று பட்ட போது..

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா

கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

Vedham Pudhithu - Kannukkul Nooru

Followers