ஆண் :
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டபாக்குதே........
நான் திமிரா செஞ்ச காரியமொண்ணு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்
மனசு வெறுத்துப் போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கிப் போச்சே (வார்த்த)
உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது வெளங்கல
கலங்கர வெளக்கமே இருட்டிலே
பெத்ததுக்கு தண்டனையை கொடுத்துட்டேன்
அவன் ரத்தத்தில் துக்கத்த நான் தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய வெதச்சிட்டேன்
அட்டகத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு
வெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வெனையாச்சு
பட்டாம் பூச்சி மேலே ஒரு கொட்டங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ணே இப்ப காணலியே
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு
படச்சவன் போட்ட முடிச்சிது
என் கழுத்துல மாட்டி இருக்குது
பகையிலே மனசு தான் பதருது கனவுல பெய்யிர மழ இது
நான் கைதொடும் போது மறையுது
மேகமே சோகமா உறையுது
சுரைத் தேங்கா போல என்ன சுக்கு நுறா ஒடைக்காதே
சொக்கபன மேலே நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகையிலே
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே பேயிக் காத்து வீசியதே (வார்த்த)
Thaamirabharani - Vaartha Onnu