குழு்:
கஞ்சுன மேல நெய்மேல எடையமேல நல்ல மேல
முல்லக்காடு கோவக்காடு பூச்சிக்காடு பொம்மாரிக்காடு
குறும்பூரு நல்லூரு ஆத்தூரு பனையூரு
வல்லநாடு மொராப்ப நாடு தெய்வ செயல் புதங்கோயிங்
ஆண்:
பொண்ணுங்கள தேடிபாத்தேன் வள்ளிய கண்டு பிடிச்சேன்
பத்தாயிரம் கலெக்டிங் கல கல கல கலெக்டிவ்
திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா
தெருத் தெருவா அலையவச்சா திருச்செந்தூரு முருகா
ஏ........ ஹேய்........... தேவதையா வந்தா தலவலியதந்தா
தேடித்தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா
காசுக்கு காயிரம் கடத்தெரு மேயிரம்
கண்டபடி பாயிரம் காணலயே
அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா (திரு)
லோக்கலு ஆளுமில்ல அவுட்டரில் பாத்ததில்ல
அவளினி மாட்டிக்கிட்டா கதகளிதான் (அவ)
திருச்செந்தூரு முருகா
வாகஷம் வந்தும் தர எறங்கும்
ப்ளைட்டில் கூட தேடிபாத்து புட்டோம்
காலையில தெனம் ஸ்டேஷன் வரும்
முத்துநகர் ட்ரெயின பொரட்டிப் புட்டோம்
பனிமாதா கோயிலு மணிய
கயிறே இல்லாம அடுச்சுப்புட்டா
குழு்:
அவ கீர வட நாம நாடார் கட
காசு கெடைக்கலையினா தேடி மூஞ்சிய ஒட
அவ சிக்கட்டும் சிக்குஎடுப்போம்
அவ நெட்டையா இல்ல குட்டையா
புளியங்கொட்டையா நாட்டுக்கட்டையா
அவ ஒத்தையா இல்ல ரெட்டையா
கிழிஞ்ச சட்டையா கழுத மூட்டையா
பெண்:
ஆ...... கணபதி சரணம் கணபதி சரணம்
கணேஷ சரணம் கணபதியே
ஐந்து கரத்தினை யானை முகத்தினை
அகிலம் முழுவதும் கணபதியே கணபதியே கணபதியே
ஆண்:
பிகருங்கெல்லாம் நம்ம அழுகவிட்டு
அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு
கிரைண்டருல போட்ட அரிசியைப் போல்
பசங்க வாழ்க்க வெந்து நொந்து நூலா ஆச்சு
பொண்ண பூவுனு சொன்னது நால
நாரு நாராக கிழிக்குதுடா
அவங்கள தெய்வமின்னும் சாமி ஆடுறhங்க
ஒடும் ஆறு என்னும் காலவாரு ராங்க
குத்து வெளங்குன்னும் குத்துராங்க
அவ கேடியா திருட்டு சி.டி.யா
ஏ.பி. சீடியா கொப்பன் தடியா
அவசிட்டியா பட்டி தொட்டியா
கொரங்கு புத்தியா குதிர லத்தியா (திரு)
Thaamirabharani - Thiruchendhuru Muruga