குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல
ஆண்:
கட்டப்பொம்மன் ஊரெனக்கு கெட்டவன்னு பேரெனக்கு
எட்டப்பனா எவன் வந்தா எட்டிஎட்டி மிதி இருக்கு
குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல
ஆண்:
பரணியில் பொறந்தவன்டா தரணிய பொளப்பவன்டா
நல்ல தண்ணி தீவுக்குள்ள கெட்ட தண்ணி அடிப்பவன்டா
குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல
ஆண்:
வெட்டருவா என் பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச் சொன்னா வீசுமே (வாரான்)
ஆண்:
ராத்திரியில் முழிப்போம் காலையில் படுப்போம்
நல்லவன கெடுப்போம் நாங்க நாலு பேர மிதிப்போம்
சமுத்திரத்தில் குளிப்போம் சத்திரத்தில் கெடப்போம்
சண்டையின்னு வந்தா எலும்பு சூப்பு வச்சுகுடிப்போம்
எங்க கூட்டத்தில குள்ள நரியே இல்ல
எங்க ஒட்டத்தில ஒரு ஒளியே இல்ல (வாரான்)
ஆண்:
கபடி........... கபடி............... கபடி................... கபடி...................
கேட்டு பூட்டி இருந்தா ஓட்ட பரிச்சு குதிப்போம்
இரும்பு பெட்டிய பாத்தா நாங்க ஏ.டி. எம்மாநெனப்போம்
கையெழுத்தப் போட்டு காசத்தானே அடிப்போம்
கல்லாப் பெட்டிய பாத்தா நாங்க நல்லா தானே நடிப்போம்
எங்க சட்டபையில் துட்டு தானா வரும்
எங்க தூண்டிலிலே தங்கமீனா வரும் (வாரான்)
Thaamirabharani - Vaaraan Varavarale