Pages

Search This Blog

Friday, November 25, 2016

கண்ணன் வருவான் - காற்றுக்கு பூக்கள் சொந்தம்

காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா?

தாலாட்டு கேட்கவும் இல்ல
தாய் பாசம் பார்க்கவும் இல்ல
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா?
நெஞ்சுக்குள்ள மல்லிகைப்பூ தருவாளா?
(காற்றுக்கு..)

பத்து விரலும் எனக்கு மாத்திரம்
புல்லாங்குழலாய் மாறவேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்?
நல்ல வரம் கொடுக்கும்
மீனாய் மாறி நீரில் நீந்தனும்
குயிலாய் மாறி விண்ணில் பறக்கனும்
காற்றா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்
ஒருத்தி துணை வேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம்
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்
சாமி ஒன்னு கண்ண முழுச்சு பார்த்திடுமா?
அவளா காட்டிடுமா?
(காற்றுக்கு..)

மயிலே மயிலே தோகை தருவாயா?
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவாயா?
விண்மீன் அதிலே வீடு கட்டணும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
மரமே மரமே கிளைகள் தருவாயா?
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே
நிசமா தெரியாதே..

பெ: காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்கைக்கொஉ அர்த்தம் சொல்லி தருவாளே..

Kannan Varuvaan - Kaathukku Pookkal

அலை - என் ரகசிய கனவுகள் இனிக்கிற

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போலே வருவானா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா தொடுவானா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

பெண் : கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

ஆண் : இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்

பெண் : எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

ஆண் : காதல் நீரிலே மூழ்கி போகிறேன்

பெண் : கையை நீட்டவா கரையில் சேர்க்கவா
இவன் தானா இவன் தானா இவனோடு இணைவேனா

ஆண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவளா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா செய்பவனா செய்பவனா

பெண் : தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா

ஆண் : வெட்கத்தை வீசியே வாவென சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

பெண் : அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்

ஆண் : கன்னக்குழிகள் தான் காதல் தேசமா ஈரமுத்தம் தான் இன்ப தீர்த்தமா
இவள் தானா இவள் தானா இவளோடு இணைவேனா

பெண் : என் ரகசிய கனவுகள் இனிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா

ஆண் : என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவளா
மழை போலே வருவாளா மடி மேலே விழுவாளா

பெண் : மலர் போலே தொடுவானா தொடுவானா இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

பெண் : இவன் தானா

ஆண் : இவள் தானா

பெண் : இவனோடு இணைவேனா

Alai - En Ragasiya Kanavukal

குத்து - எனை தீண்டி விட்டாள்

ஆண் : எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்
என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்
மனதோடு மணல் மேடு எதற்காக செதுக்கி விட்டாய்
எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்
உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்

Kuththu - Ennai Theendi Vittai

நெஞ்சில் ஜில் ஜில் - உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்

ஆ: நெஞ்சில் ஜில் ஜில்..
எனக் காதல் பிறக்கும்..
நெஞ்சே நின்றாலும்
காதல் துடிக்கும்
அழியாது காதல்..
அழியாது காதல்..

ஆ: உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு
விண்மீன்கள் எல்லாம் அங்கே
நாம் வந்த பாத சுவடு

பெ: தீராத தேடல் இது
தித்திக்கும் தூரல் இது..

ஆ: (உனக்காகத்தானே..)

பெ: தேவதைப்போல வந்து காதல் இறங்கும்
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்

ஆ: புரியாது பெண்ணே காரணங்கள்
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்..
த ன னா ன னா...

பெ: வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்

ஆ: காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்
(உனக்காகத்தானே..)

பெ: காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்

ஆ: சலவைக்கல் சிலையே பூஜிக்க வா..
ரகசிய பூவாய் தனனானனா...

பெ: உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது

ஆ: பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்
(உனக்காகத்தானே...)

Nenjil Jil Jil - Unakkagathaane Uyir Vaazhgiren

உதயகீதம் - பாடு நிலாவே தேன் கவிதை

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேரவேன்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர கூடும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே



Udaya Geetham - Paadu Nilavae Then Kavithai Poo Malare

உதயகீதம் - சங்கீத மேகம் தேன் சிந்தும்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

லலல… லலல…
லல… லல… ல…

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே…. ஹோ…..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே…. ஹோ…..

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே… ஒ…
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்



Udaya Geetham - Sangeetha Megam

உதயகீதம் - தேனே தென்பாண்டி மீனே

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனே)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)



Udhaya Geetham - Thene Thenpandi

Followers