Pages

Search This Blog

Friday, November 25, 2016

கண்ணன் வருவான் - காற்றுக்கு பூக்கள் சொந்தம்

காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா?

தாலாட்டு கேட்கவும் இல்ல
தாய் பாசம் பார்க்கவும் இல்ல
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா?
நெஞ்சுக்குள்ள மல்லிகைப்பூ தருவாளா?
(காற்றுக்கு..)

பத்து விரலும் எனக்கு மாத்திரம்
புல்லாங்குழலாய் மாறவேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்?
நல்ல வரம் கொடுக்கும்
மீனாய் மாறி நீரில் நீந்தனும்
குயிலாய் மாறி விண்ணில் பறக்கனும்
காற்றா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்
ஒருத்தி துணை வேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம்
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்
சாமி ஒன்னு கண்ண முழுச்சு பார்த்திடுமா?
அவளா காட்டிடுமா?
(காற்றுக்கு..)

மயிலே மயிலே தோகை தருவாயா?
தோகை அதிலே சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவாயா?
விண்மீன் அதிலே வீடு கட்டணும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கு தெரியாதே
மரமே மரமே கிளைகள் தருவாயா?
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே
நிசமா தெரியாதே..

பெ: காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே
உன் வாழ்கைக்கொஉ அர்த்தம் சொல்லி தருவாளே..

Kannan Varuvaan - Kaathukku Pookkal

Followers