Pages

Search This Blog

Friday, November 25, 2016

உதயகீதம் - தேனே தென்பாண்டி மீனே

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனே)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)



Udhaya Geetham - Thene Thenpandi

Followers