Pages

Search This Blog

Friday, January 24, 2014

சேது - எங்கே செல்லும் இந்த பாதை

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ

எங்கே செல்லும் ....

ஊரை விட்டு ஓ ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்
காதலென்றால் ஓ வேதனையா

எங்கே செல்லும்....

மண் கேட்டா அந்த மழை பொழியும்
மேகம் பொழியாமல் போவதுண்டா
கரை கேட்டா அந்த அலைகள் வரும்
அலைகள் தழுவாமல் போவதுண்டா
கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே
என் உயிரே ஓ என் உயிரே

எங்கே செல்லும்....

Sethu - Enge Sellum Intha

ரசிக்கும் சீமானே - நான் உன்னை பார்க்கும் நேரம்

நான் உன்னை  பார்க்கும்  நேரம் 
நீ  மண்ணை  பார்ப்ப  தேனோ 
உன்  கண்ணை  உற்றுப்  பார்த்தல் 
சரியோ  

நான்  வெட்கம்  சிந்தும்  நேரம் 
நீ  முத்தம்  வைக்கக்  கூடும் 
என்  கண்கள்  மூடி  கொண்டால் 
பிழையோ  

நீ  சின்ன  சின்ன  புன்னகை  சிந்தும் வேலை 
உந்தன்  கன்னக்குழியில்  நான் சிக்கிக்  கொண்டேன் 
உந்தன்  கை விரல்கள்  என்னுடலை  தீண்டும்  நேரம்
இந்த பூமி   பந்தையும்   நான் தாண்டி  சென்றேன் 
ஹே  ஹ  ஏ …  

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால்
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடி கொண்டால்  பிழையோ 

===  

தூரத்தில்  சிணுங்கும் 
உன் கொலுசொசையை 
அடிக்கடி  கேட்க   தினம் ஆசை
 
தூக்கத்தில் 
என்னை மரத்திருப்பேன் 
உலரிட  பிறந்திடும் 
புது பாஷை  

இதயத்தில்  இருக்கும் 
நான்கு  அறைகளில் 
நிரம்பியதே 
உன் பிம்பம்  

நீ இன்றி நகர்கின்ற 
நொடி  துளி  கிடைத்தால் 
மறுக்கின்றதே 
என்னுள்ளம்  

இமைகளிலே 
மின்னும்  நளினம்
உடல் தன்னை
துளைத்தே 
செய்யும் பயணம் 

தனிமைகளை 
கொழுந்து  விடும்
இதழ்களும் 
இணைந்தே  செய்யும் நடனம் 

இரவுகளோடு 
சிறகுகள்   நீட்டி 
பறக்கின்றதே  

===  

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தல்
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க  கூடும்
என் கண்கள் மூடிக்  கொண்டால்
பிழையோ  

===  

உணகென  எழுதிடும் 
காதல்  கடிதங்களில் 
பிழைகளையும்   ரசிக்கின்றாய்  

அணு அணுவாய்
எந்தன்   உயிரில்  புகுந்து 
நீ ரகசியங்கள் 
ருசிக்கின்றாய்  

விரல்களின்  மேல் 
உள்ள
வீணை  நகங்கள்  கொண்டு  
என் மனதை
நீ தெரிந்தாய்  

நமகென  பிறந்திட்ட 
புதியதோர்  உலகை
முதல்  முறை
நீ காட்டுகின்றாய்  

விழிகளின்  மேல்
துள்ளும்  உருவம்
ஜாடைகள்  காட்டிடும் 
செல்ல  மிருகம்  

நினைவினிலே 
உந்தன்  உருவம்
நிஜமென  நினைதேன்னை 
வெட்கம் தழுவும்  

மௌனங்கள்  மீது
சலனங்கள்   வீசி
சைக்கின்றதே 

 === 

 நான் உன்னை பார்க்கும் நேரம்
 நீ மண்ணை பார்ப்ப தேனோ 
உன்  கண்ணை  உற்றுப்  பார்த்தா ல் 
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடிக் கொண்டால்
பிழையோ 

=== 

 நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேளை
உந்தன் கன்னக்குழியில் நான் சிக்கி  கொண்டேன்
உந்தன் கை விரல்கள் என்னுடலை தீண்டும் நேரம்
இந்த பூமி பந்தையும்  நான் தாண்டி சென்றேன்
ஹே ஹ யே…

Rasikkum Seemane - Naan Unnai Parkkum Neram

ரசிக்கும் சீமானே - கோடி கோடி மின்னல்கள்

கோடி  கோடி  மின்னல்கள் 
கூடி  பெண்மை  ஆனதே 
மூடி  மூடி  வைத்தாலும் 
வெளிச்சம்  வீசுதே  

கோடி  கோடி  மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே
மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே 

மெத்தை  என்னும் மலை ஏறி 
தியானம்   செய்யலாம்
ஹே .. 
வெட்கம்  விட்டு நீயும் வா 
ஞ்யானி  ஆகலாம்  

விழியோடு  விழி  சேர்த்து 
இதழோடு  இதழ்  பூட்டு 
விரலோடு  விரல் கோர்த்து 
உடலோடு  போர்தடி  

ஆடை என்னும் மேகங்கள் 
விலகக்கூடுமோ  சொல்
ஆசை கொண்ட என் நெஞ்சில்
சாரல்  தூருமோ  

===  

ஆதாம்  ஏவாள் 
தீண்டித்  தானே
உலகம் பிறந்ததே  

காமம்  பிறந்த 
பின்னால்  தானே
காதல்  வந்ததே  

தேகம்  என்னும் அறைக்குள் 
வேத 
கனவு தூங்குதே  

தூக்கம்  கலைக்க 
உடலின் கதவை 
திறக்க  வேண்டுமே  

பெண்மை கொண்ட கற்போடு 
மோத  செய்கிறேன் 
எந்தன்  காதல்  கொண்ட
கர்ப்பை 
உனக்கு 
உணர்த்த  பார்க்கிறேன்  

மெத்தை என்னும் மலை ஏறி
த்யானம் செய்யலாம்
ஹே… 
வெட்கம் விட்டு நீயும் வா
ஞ்யானி ஆகலாம் 

கோடி கோடி மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே
மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே 

===  

இமைகள்  கூடும் வரைக்கும் 
உன்னை
இறுக்கி  அணைக்கிறேன்  

இதழ்கள்  வேர்க்கும்  வரையில்
உன் மே ல் 
முத்தம்  வைக்கிறேன்  

ஒற்றை விரல் உடையால் 
உடலை
திருட  வருகிறேன்  

உச்சி  தொடங்கி பாதம்  வரையில்
புதையல்  தேடினேன்  

தேகம் ரெண்டும்  தணலாகி 
அலைகள் மோதுமே  

நமது கட்டில்  என்னும்
கப்பல் தான் 
தினமும் வாழும்  

மெத்தை என்னும் மலை ஏறி
த்யானம்  செய்யலாம்
ஹே… 
வெட்கம் விட்டு நீயும் வா
ஞ்யாணி ஆகலாம்

===  

கோடி கோடி மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே
மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே 

கோடி கோடி மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே
மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே 

மெத்தை என்னும் மலை ஏறி
த்யானம் செய்யலாம்
ஹே.. 
வெட்கம் விட்டு நீயும் வா
ஞ்யாணி ஆகலாம் 

விழியோடு விழி சேர்த்து
இதழோடு இதழ் பூட்டு
விரலோடு விரல் கோர்த்து
உடலோடு போர்தடி 

ஆடை என்னும் மேகங்கள்
விலகக்கூடுமோ சொல்
ஆசை கொண்ட என் நெஞ்சில்
சாரல் தூருமோ

Rasikkum Seemane - Kodi Kodi Minnalgal

ரசிக்கும் சீமானே - பூவே பூவே சொல்லிடு

ஏ  ஹே ..  
பூவே  பூவே சொல்லிடு 
இது காதல்  தான 
காற்றே  காற்றே சொல்லிடு
இது காதல் தானா 

இது சரியா
இது முறையா 
இது சரியா
இது முறையா
இது காதல் வாசம்  தானா 

யை  ஹே…  

பூவே பூவே சொல்லிடு
இது காதல் தானா
காற்றே காற்றே சொல்லிடு
இது காதல் தானா

 லே  ல  லே லே லோ … 

கொஞ்சி விளையாடும்  பருவம் 
காதலிக்கில்லை  உருவம்
மீசை  முளைக்கிற  வயசு 
ஆசை வளக்குற  மனசு
 
பரீட்சை  நேரம் 
மறந்து  போகும்
பட்டாம்  பூச்சிகள் 
பறந்து  போகும் 

கவிதை  நூறு
மனதில் ஓடும்
கண்கள் கூட
வளையல்  போடும்
ரகசிய  வேதனை  

பூவே பூவே சொல்லிடு
இது காதல் தானா
காற்றே காற்றே சொல்லிடு
இது காதல் தானா 

இது சரியா
இது முறையா
இது சரியா
இது முறையா
இது காதல் வாசம் தானா 
யை ஹே…

Rasikkum Seemane - Poove Poove Sollidu

ராஜகுமாரன் - சின்ன சின்ன சொல்லெடுத்து

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு
தனியாக மாமன் துணை தேடி வாட
தெரியாமல் நானும் பரிகாரம் தேட

சரணம் 1

கண்ணீர் கரைந்துருகும் கன்னி மெழுகானேன்
நானே நீ பாரடி
மன்னன் மனம் கலங்க மண்ணில் சருகானேன்
பூவே நீ கூறடி
நித்திரையை நானும் மூடி நித்தம் ஒரு கானம் பாடி
உத்தமியாய் தேடி தேடி கத்தும் ஒரு வானம் பாடி
உன்னுதட்டில் பொய்யை வைத்து முள்ளில் தைத்த பூவாய் ஆனேன்
என் மனதில் பாசம் வைத்து கல்லில் செய்த தேராய் போனேன்
அலை மேல் படகாய் ஆனேன்

சின்ன சின்ன சொல்லெடுத்து ...

சொல்லால் விழைந்ததின்ற சொந்தக்கதை தானே
பூவே நீ கேளடி
பெண்ணே வருத்தமில்லை நெஞ்சில் என்ன பாரம்
நீயே போய் கூறடி
கன்னிமையை மீறும் ஈரம்
கன்னி இவள் கோபம் கூறும்
வெண்ணிலவை மூடும் மேகம் விட்டு விலகாதோ தூரம்
வண்ணக்கிளி போனபின்னே தன்னந்தநியானேன் நானே
எண்ணி எண்ணி ஆவதென்ன கண்கள் உறங்காதோ மாமா
உயிர் போய் உடலானேன்

சின்ன சின்ன சொல்லெடுத்து ...

Rajakumaran - Chinna Chinna Sol Eduthu

ராஜகுமாரன் - பொட்டு வச்சதாரு யாரு யாரு

பொட்டு வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
கட்டி வச்சதாரு யாரு யாரு
தாலியை தேதிகுறிச்சு
வெட்டி வச்சதாரு யாரு யாரு
வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

ஆலான பேரு வேரோடு போச்சு
ஆவாரம் காண வீணாகலாச்சு
தாயே உன் தாலி சேதாராமாச்சு
தீயோடு சேர்ந்து தீயாகிப்போச்சு
கண்டாங்கிச்சேல வண்ணச்சோலை வெறும் நூலாச்சு
செண்டான மாலை இந்த வேளை அந்த நூலாச்சு
தாங்காத பாரம் யார் தாங்கக்கூடும்
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

கூண்டோடு சாய்ஞ்சு தூங்காம தேங்கி
நீ பாட கேட்டேன் தாலாட்டு பாட்டு
ஊராரும் கூடி உன் பேரை கூறி
ஒப்பாரிப்பாட்டை இப்போது கேட்டேன்
கல்லான சாமி முகம் காமி இது பொய்தானா
இல்லாது போனால் இங்கு நீ வாழ்ந்தது மெய்தானா
ஆகாயம் சாய்ஞ்ச்சா ஆதாரம் யாரு
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு... யாரு....பொட்டு வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
கட்டி வச்சதாரு யாரு யாரு
தாலியை தேதிகுறிச்சு
வெட்டி வச்சதாரு யாரு யாரு
வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

ஆலான பேரு வேரோடு போச்சு
ஆவாரம் காண வீணாகலாச்சு
தாயே உன் தாலி சேதாராமாச்சு
தீயோடு சேர்ந்து தீயாகிப்போச்சு
கண்டாங்கிச்சேல வண்ணச்சோலை வெறும் நூலாச்சு
செண்டான மாலை இந்த வேளை அந்த நூலாச்சு
தாங்காத பாரம் யார் தாங்கக்கூடும்
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

கூண்டோடு சாய்ஞ்சு தூங்காம தேங்கி
நீ பாட கேட்டேன் தாலாட்டு பாட்டு
ஊராரும் கூடி உன் பேரை கூறி
ஒப்பாரிப்பாட்டை இப்போது கேட்டேன்
கல்லான சாமி முகம் காமி இது பொய்தானா
இல்லாது போனால் இங்கு நீ வாழ்ந்தது மெய்தானா
ஆகாயம் சாய்ஞ்ச்சா ஆதாரம் யாரு
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு... யாரு...

Rajakumaran - Pottu Vachathu Yaaru

ராஜகுமாரன் - என்னவென்று சொல்வதம்மா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிறைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தென் நிலா'

என்னவென்று .....

தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களும்
பொன் ஊஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலும்
முத்தாடும் மேடை பார்த்து வாடி போகும் வான் பிறை
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தீர்க்கும் தாமரை
வண்ண பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாளாமல் நாணுவா
புது பூ கோலம் தான் காலில் போடுவா


என்னவென்று......

கண்ணோரம் ஆயிரம் காதல் கதை பேசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகம் ஆகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடி பாடி போடுவாள்
அதிகாலை மூச்சு அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

Raajakumaaran - Ennavendru Solvathamma

Followers